மேலும் அறிய

தொடர் விடுமுறை நாட்கள்.. குவிந்த சுற்றுலா பயணிகள்.. ஸ்தம்பித்த புதுச்சேரி..

புதுச்சேரி: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் காரணமாக புதுச்சேரி நகரப்பகுதி ஸ்தம்பித்தது.

புதுச்சேரி: புதுச்சேரியில், தீபாவளி விடுமுறையையொட்டி, தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, கடந்த 30ம் தேதியில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிய துவங்கினர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் காரணமாக புதுச்சேரி நகரப்பகுதி ஸ்தம்பித்தது. பல மணி நேரம் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் 30-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை 5 நாட்களும், பிற மாநிலங்களான தமிழகம் உள்ளிட்டவைகளில் தீபாவளி தினமான 31-ம் தேதி முதல் 3-ம் தேதி வரையும் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக புதுச்சேரிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதனால் கடற்கரை சாலை, பாரதி பூங்கா, பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம், அரிக்கமேடு, கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

புதுச்சேரியில் அதிகளவில் குவிந்த சுற்றுலா பயணிகள் 

குறிப்பாக வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால், தீபாவளியை முன்னிட்டு விடப்பட்ட தொடர் விடுமுறையில் ஏற்கெனவே சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் அதிகளவில் குவிந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி வணி வீதிகளாக நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, காமராஜர் வீதி உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் நகரப்பகுதி எங்கும் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

புதுச்சேரி நகர பகுதியில் ஏராளமான வெளி மாநில பதிவெண்கள் கொண்ட கார் உள்ளிட்ட வாகனங்களும் உலா வந்தன. இதனால் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து நகரப் பகுதியே ஸ்தம்பிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

மறைமலை அடிகள் சாலை, புஸ்ஸி வீதி, செஞ்சி சாலை, நேரு வீதி, அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் கார், வேன் என வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை உருவாகியுள்ளது. 

சுற்றுலா பயணிகள் வருகை எண்ணிக்கை அதிகரித்துள்ளது

பல மணி நேரம் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி சென்றதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். சில இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாக போலீஸார் போக்குவரத்தை சரி செய்தனர். சட்டம்-ஒழுங்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று படகு குழாமில் காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகரிக்கவே அப்பகுதியில் கடலூர் - புதுச்சேரி சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டன.

இதன் காரணமாக அந்த பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, மேலும் தொடர்ந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5755
Active
5484
Recovered
59
Deaths
Last Updated: Sat 7 June, 2025 at 11:52 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget