‘கிறிஸ்துவராக ஞானஸ்நானம் எடுத்தாரா திருவள்ளுவர்’ திருமாவளவன் பேசியது என்ன..?
சைவமும் வைணமும் ஆரிய மதம் அல்ல. இந்தியாவில் உள்ள 108 வைணவ கோயில்களில் 106 தமிழ்நாட்டில் தான் உள்ளது. பெரும்பாலான சைவ கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது.
திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றவர். அவர் ஒரு கிருஸ்தவராக இருந்து தான், திருக்குறள் நூலை எழுதி உள்ளார் என நூலாசிரியர் தெய்வநாயகத்தின் கருத்து அது ஆய்வுக்கு உரியது” என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
திருக்குறள் பற்றிய புரட்சி நூல் - எனும் தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் எழுதிய நூல் வெளியீட்டு விழா கீழ்ப்பாக்கத்தில் உள்ள ECI இறையியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நூலை வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “வள்ளுவரை ஓவ்வொரு சமயத்தவரும் உரிமை கோருகிறார்கள். சமீபத்திய காலத்து புள்ளி விவரம் கூறுகிறது. மதமும் கடவுளும் வேண்டாம் என வாழும் மனிதர்களின் தொகை பெருகிவருவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
சைவமும் வைணமும் ஆரிய மதம் அல்ல. இந்தியாவில் உள்ள 108 வைணவ கோயில்களில் 106 தமிழ்நாட்டில் தான் உள்ளது. பெரும்பாலான சைவ கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. 63 நாயன்மார்கள் , 12 ஆழ்வார்கள் தமிழர்கள், ஆதிசங்கரர், இராமானுஜர் , மத்வர் ஆகியோர் தத்துவங்களை மட்டுமே சொல்லி இருக்கிறார்கள். மதங்களை உருவாக்கவில்லை. தமிழர்கள் எனும் திராவிடர்கள் சமயம் தான் சைவ , வைணவ சமயங்கள். நம் மதங்களின் மீதான ஆரிய ஆக்கிரமிப்புகளிலிருந்து நாம் விடுபட வேண்டும் .
கிருத்தவத்துக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான மத வெறுப்பு பிரச்சாரம் தற்போது நடைபெற்று வருகிறது. சனாதனத்தை எதிர்க்காமல் சமூக நீதியை வென்றெடுக்க முடியாது. அதற்கு திருக்குறளும் ஆயுதமாக இருக்கிறது. கிருஸ்தவர்கள் பைபிளை மட்டும் கையிலேந்தாமல் , திருக்குறளையும் படிக்க இந்த நூல் உந்து சக்தியாக திகழும்” என்று பேசினார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ கடந்த சில வாரங்களாக திரிபுராவில் மிக மோசமான வான்முறையை முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டுள்ளது பாஜக அரசு. இதை விசிக வன்மையாக கண்டிக்கிறது. உ ப சட்டத்தின் கீழ் வழக்கறிஞர்கள் மௌலவிகள் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. எந்த மாநில அரசும் செய்வதற்கு முன்னதாக ஏற்கனவே முந்தி கொண்டு டீசல் விலையை தமிழக அரசு குறைத்தது. அதே போல் பெட்ரோல் குறைப்பார்கள் என நம்புகிறோம்.
திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றவர். அவர் ஒரு கிருஸ்தவராக இருந்து தான், திருக்குறள் நூலை எழுதி உள்ளார் என நூலாசிரியர் தெய்வநாயகத்தின் கருத்து அது ஆய்வுக்கு உரியது.
பழங்குடியினர் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்பது தான் நீண்ட நாள் கோரிக்கை, அரசின் நலத்திட்டங்களை பெற முடியாத நிலையில் உள்ளனர். குறிப்பாக சாதி சான்றிதழ், இதர அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து தர வேண்டும்.
தமிழ்நாட்டில் குற்ற நடவடிக்கைகளில் குறவர்களை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. எனவே முதலமைச்சர் உரிய புலனாய்வு இல்லாமல் அந்த மக்களை கைது செய்வதை தவிர்க்க உரிய செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். பூஞ்சேரி கிராமத்தில் முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் குதர்கமாக கருத்தில் கொள்ள வேண்டியவை அல்ல. பழங்குடியினருக்கு, பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்குவது அரசின் செயல்திட்டங்களில் ஒன்று” என்று கூறினார்.