டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்தால்... அரசு பேருந்து நடத்துனர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் கூகுள் பே, போன் பே போன்றவற்றின் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்- தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு
இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மத்திய அரசால் எடுக்கப்பட்டது. அப்போது அதிகளவில் பண பரிமாற்ற முறையாக இந்த டிஜிட்டல் பண பரிமாற்ற முறை ஆகும்.
குறிப்பாக டெபிட், கிரெடிட் கார்டுகளைக் கொண்டு கடைகளில் பொருட்களை வாங்குவது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே பரவலாக நடைமுறைக்கு வந்து விட்டது. ஆனாலும் அவற்றால் அதிக அளவில் பயன்பாட்டை ஊக்குவிக்க முடியவில்லை.
அதிக அளவு பண புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஆகும்.
முதலில் ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகள் மூலம் பரிந்துரைக்கப்பட்டது. மொபைல் போன்களில் டிஜிட்டல் பேமண்ட் சேவைகளை வழங்க பே டிம், கூகுள் பே, அமேசான் பே போன்ற நிறுவனங்கள் அடுத்தடுத்த களம் இறங்கியது.
இப்போது தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ளூர் அளவில் தமிழிலும் கூட டிஜிட்டல் பேமண்ட் சேவைகளை வழங்க ஸ்டார்ட்- அப்கள் துவங்கப்பட்டு வருகிறது.
ஆகையால் டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவைகள் பாமர மக்களிடையேயும் அதிகளவில் சென்றடைய வேண்டும் என்பது அவசியம் ஆகும்.
குறிப்பாக ஆரம்பக்காலம் முதல் இன்று வரை டிஜிட்டல் சேவைகள் ஸ்மார்ட்போன் என்றழைக்கப்படும் கூகுளின் ஆண்டிராய்டு இயங்குத்தளம் அல்லது அது போன்றவற்றின் தொழில்நுட்ப உதவியோடு மட்டுமே இயங்குகின்றது. இதனால் அத்தகைய போன்களை வைத்திருப்போர் மட்டுமே இச்சேவைகளைப் பயன்படுத்த முடியும்.
ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் ஸ்மார்ட் போன்கள் எளிதாக கிடைக்கும் காலம் வந்துவிட்டது. ஸ்மார்ட் போன்களை மாதாந்திர தவணைகளில் வாங்குவோரின் எண்ணிக்கையும் மிக அதிகம். எனவே டிஜிட்டல் சேவைகளை அனைவருக்குமானது ஆகும்.
டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது குறிப்பிட்ட பேருந்துகளில் அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பே, போன் பே போன்றவற்றின் மூலம் பணம் செலுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிலையில், பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துநர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசு பேருந்துகளில், ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமான மின்னணு பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை மூலம் பயணிகளுக்குப் பயண சீட்டு வழங்கும் நடத்துநர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்து பொதுமக்கள் கருத்து.
டிஜிட்டல் பரிவர்த்தனை அரசு பேருந்துகளில் அறிமுகப்படுத்தியது சிறப்பான திட்டம் ஆகும். இந்தத் திட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் கடந்த சில மாதங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் சில குளறுபடிகள் நிலவி வருகிறது. அத்தகைய பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் சரியான முறையில் இந்த திட்டத்தை அமல்படுத்தினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.