TN Rain Alert: இன்று மாலை முதல் கொட்டப்போகும் மழை - தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை முதல் கனமழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மிக்ஜாம்” சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆந்திர பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம்-புதுச்சேரி கரையோரங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு வங்கக்கடலில் நகர்ந்து கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ வேகத்தில், சூறாவளி புயலாக “மிக்ஜாம்” தீவிரமடைந்து, புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 290 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
CS MICHAUNG over SW BoB at 0830 IST of 3 Dec abt 290 km E-SE of Puducherry, 290 km SE of Chennai. To reach WC BoB off S Andhra Pradesh adj N Tamilnadu coasts by 4 Dec forenoon. To cross south AP coast between Nellore and Machilipatnam during forenoon of 5 Dec as SCS. pic.twitter.com/uhNonQnLVs
— India Meteorological Department (@Indiametdept) December 3, 2023
இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று, நாளை (டிசம்பர் 4 ஆம் தேதி) காலை தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும். அதன்பிறகு, இது கிட்டத்தட்ட வடக்கு நோக்கி, தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு நெருக்கமாகவும் நகர்ந்து, நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை டிசம்பர் 5 ஆம் தேதி முன் பகலில் ஒரு சூறாவளி புயலாகக் கடக்கும், அதிகபட்சமாக மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் காற்று வீசுக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், “ நாளை காலை மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகில் வரும். அப்போது அதிகபட்சமான மேகக்கூட்டங்கள் நகர்ந்து வரக்கூடும். இதன் காரணமாக இன்று மாலை சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். சென்னைக்கு அருகில் கரையை கடக்கவில்லை என்றால் கூட புயலின் தீவிரம் மற்றும் நகரும் வேகம் பொறுத்து கனமழை கொட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.