மேலும் அறிய

PM Modi: வள்ளலார் உயிருடன் இருந்திருந்தால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பாராட்டி இருப்பார் - பிரதமர் மோடி..

தேசிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்கள் தங்களது வட்டார மொழிகளிலேயே மருத்துவம் பொறியியல் படிப்பை படிக்கலாம் என வள்ளலார் சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வள்ளலார் பிறந்தாள் அக்டோபர் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இணைந்து வள்ளலார் சிலையை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பிரமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துக்கொண்டார். 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் வள்ளளார் பிறந்தநால் தனிப்பெருங்கருணை நாளாக அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, “ வள்ளலார் என்று அழைக்கப்படும் மாபெரும் மனிதரின் 200 வது பிறந்தாள் நிகழ்ச்சியில் உரையாற்றுவது பெருமையுடன் கருதுகிறேன். இந்த நிகழ்ச்சி வள்ளலாருக்கு நெருங்கிய தொடர்புடைய வடலூரில் நடைபெறுவது கூடுதல் சிறப்பு. வள்ளலார் நமது உயரிய நன்மதிப்பை பெற்ற புனிதர்களில் ஒருவர். அவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஆனால் இன்றும் அவரது ஆன்மீக கருத்துகள் உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. அவரது சிந்தனைகள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

நாம் வள்ளலாரை நினைவு கூறும் போது அவரது அக்கரை காருண்யம் ஆகியவை நம் நினைவுக்கு வருகிறது.  அவர் சக மனிதர்கள் மீதான கருனையை வலியுறுத்தும் ஜீவகாருண்யத்தை அடிப்படையாக கொண்ட வாழ்க்கை முறையில் நம்பிக்கை கொண்டவர்.  பசியை போக்குவதற்கென அவரது கடமை பற்று அவரது முக்கிய கொடைகளில் ஒன்று. வெறும் வயிற்றில் ஒருவர் நித்திரைக்கு செல்வதை விட மிகப்பெரும் வேதனை அளிக்கும் செயல் அவருக்கு வேறு எதுவும் இல்லை. இரக்கச் செயல்களிலேயே மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது என்னவென்றால், பசியான ஒருவருக்கும் உணவளிப்பது தான் என நம்பினார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அவர் சொன்னார். பயிர்கள் கருகுவதை பார்க்கும் போது என் மனமும் கருகியது என்பது தான் அர்த்தம். இதே கொள்கை உடையது தான் பாஜகவும். கொரோனா காலக்கட்டத்தில் 80 கோடி மக்கள் இலவச உணவுப் பொருட்கள் ரேஷனில் பெற்றது கடினமான சூழலில் நல்ல நிவாரணமாக அமைந்தது.  

வள்ளலார் கற்பதையும், கல்வியையும் நம்பினார். பிறருக்கு வழிகாட்டுபவர் என்ற வகையில் அவரது கதவுகள் எப்போதும் திறந்தே இருந்தது. இளைஞர்கள் தமிழ், ஆங்கில, சம்ஸ்கிருதம் ஆகியவற்றில் புலமை பெற வேண்டும் என விரும்பினார். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் கல்வி கட்டமைப்பு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தேசிய கல்விக் கொள்கையை பெற்றுள்ளது. இந்த கொள்கை கல்வி துறையில் சிறப்பான முறையில் மாற்றங்களை ஏற்படுத்தும். இதில் புதுமை சிந்தனை, ஆராய்ச்சி, வளர்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இப்போது இளைஞர்கள் தங்களது வட்டார மொழிகளிலேயே மருத்துவம், பொறியியல் படிக்க இயலும். இதன் மூலம் இளைஞர்களுக்கு பல வாய்ப்புகள் உருவாகியுள்ளது.  

வள்ளலார் காலத்திற்கும் முன்னதாக சிந்தித்தவர். சமூக சீர் திருத்தத்தை எடுத்துக்கொண்டால் கட்வுளைப்பற்றிய வள்ளலாரின் பார்வை பல்வேறு மதங்கள், நமிபைக்கைக்கு அப்பாற்பட்டவை. இவ்வுலகின் ஒவ்வொரு அனுவிலும் கடவுளின் அம்சங்களை கண்டார். அவரது போதனைகள் சமத்துவ சமூதாயத்தை வலியுறுத்துவதாகும். அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக மகளிர் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் பாராட்டிருப்பார். ஒரே பாரதம் உண்ணத பாரதம் என்ற நமது ஒட்டுமொத்த சிந்தனைக்கு வலு சேர்க்க காலமும் இடமும் கலந்த நமது பன்முகத்தன்மைக்கு பொதுயிழையாக திகழ்கின்ற பெரும் ஞானிகளின் போதனைகள் உதவுகின்றன. அவரது போதனைகளை பரப்புவோம். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி என்பதை உறுதி செய்வோம்” என பேசியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Idly Kadai: பாங்காக்கில் இட்லி கடை போடும் தனுஷ்! இந்த வாரமே கிளம்புறாரு - ரசிகர்களே
Idly Kadai: பாங்காக்கில் இட்லி கடை போடும் தனுஷ்! இந்த வாரமே கிளம்புறாரு - ரசிகர்களே
Watch Video :
Watch Video : "அடியா இல்ல இடியா.." கூரைக்கு பறந்த பந்து.. வாயடைத்து நின்ற ஹாரிஸ் ராஃப்
ஐயப்ப பக்தர்களுக்காக திறக்கப்பட்ட சத்திரம், புல்லுமேடு பாதைகள்... எந்தெந்த நேரங்களில் செல்லலாம்..!
ஐயப்ப பக்தர்களுக்காக திறக்கப்பட்ட சத்திரம், புல்லுமேடு பாதைகள்... எந்தெந்த நேரங்களில் செல்லலாம்..!
Embed widget