President Murmu: நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.! குடியரசுத் தலைவரின் திருவாரூர் பல்கலைக்கழக பயணம் ரத்து.!
President Murmu: ஃபெஞ்சல் புயல் எதிரொலியால், குடியரசுத் தலைவர் பங்கேற்கவிருந்த திருவாரூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் ஃபெஞ்சல் புயலானது, நாளை பிற்பகல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நாளை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவிருந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பயணமானது ரத்து செய்யப்பட்டது.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை பங்கேற்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால், வங்க கடலில் நிலைகொண்டிருக்கும் ஃபெஞ்சல் புயலானது, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளை , திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பயணமானது ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவானது ரத்து செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.