தமிழ்நாட்டில் எத்தனை மக்கள் மருந்தகங்கள் உள்ளன? மத்திய அரசு தகவல்
மக்கள் மருந்தகங்கள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா பட்டேல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 1,432 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் எத்தனை மக்கள் மருந்தகங்கள் உள்ளன?
மக்கள் மருந்தகங்கள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா பட்டேல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், "பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகம் திட்டத்தின் கீழ் கடந்த 30ஆம் தேதி வரை, 16,912 மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 2,110 மருந்துகள், 315 அறுவை சிகிச்சை உபகரணங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
இவை இருதய நோய், புற்றுநோய் எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு, தொற்றுநோய் எதிர்ப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு மற்றும் இரைப்பை குடல் மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் போன்ற அனைத்து முக்கிய சிகிச்சைக்கான மருந்துகளை இது உள்ளடக்கியது. அனைத்து பொது மருந்துகளும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு தகவல்:
மக்கள் மருந்தகங்களில் சீரான விநியோகம் மற்றும் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஒரு மத்தியக் கிடங்கு, நான்கு பிராந்திய கிடங்குகள் மற்றும் 39 விநியோகஸ்தர்கள் உள்ளனர். விரைவாக விற்பனையாகக் கூடிய 400 பொருட்களின் கிடைக்கும் தன்மை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
மேலும், அதிகம் விற்பனையாகும் 100 மருந்துகள் மற்றும் சந்தையில் விரைவாக விற்பனையாகும் 100 மருந்துகளைக் கொண்ட 200 மருந்துகளுக்கு குறைந்தபட்ச இருப்பு ஆணை செயல்படுத்தப்பட்டுள்ளது. மருந்துகளின் இருப்பை உறுதி செய்யும் ஆணையின் கீழ், மக்கள் மருந்தக உரிமையாளர்கள் தாங்கள் பராமரிக்கும் 200 மருந்துகளின் இருப்பு அடிப்படையில் ஊக்கத்தொகையைப் பெற தகுதியுடையவர்களாகிறார்கள்.
அனைவருக்கும் குறைந்த விலையில் தரமான பொதுவான மருந்துகளை கிடைக்கச் செய்வதற்காக அரசு இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் விளைவாக, கடந்த 11 ஆண்டுகளில், மக்களுக்கு சுமார் ரூ.38,000 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளது.
இது, தேசிய சுகாதாரக் கணக்கு மதிப்பீடுகளின்படி, 2014-15 இரண்டாம் நிதியாண்டில் மொத்த சுகாதாரச் செலவினத்தில் 62.6% ஆக இருந்த குடும்பங்களின் செலவிடும் தொகை 2021-22-ம் நிதியாண்டில் 39.4% ஆகக் குறைந்துள்ளது. 2027 மார்ச் மாதத்திற்குள் 25,000 மக்கள் மருந்தகங்களை திறப்பதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழ்நாட்டில் 30.06.2025 நிலவரப்படி 1,432 மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன" என்றார்.





















