Power Cut: தமிழக மக்களே! நாளை(27.6.2025) எங்கெல்லாம் மின் தடை தெரியுமா? இப்பவே தெரிஞ்சுக்கோங்க
Power Shut Down: சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை கீழே விரிவாக காணலாம்.

Power Shut Down: தமிழ்நாடு மின்சார வாரியம் மாதத்தில் ஒருநாள் ட்ரான்ஸ்பார்மர்கள், வயர்கள் உள்ளிட்டவற்றை பராமரிப்பதற்காக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த நாளில் மின்தடை செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் நாளை சென்னை, கோயம்புத்தூர், மதுரை, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பராமரிப்பு பணிக்காக சில இடங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது. எந்தெந்த பகுதிகள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
சென்னை:
கே.கே.நகரில் உள்ள 1 முதல் 12வது பிரிவுகளின் பகுதி, ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்கே சண்முகம் சாலை, நெசப்பாக்கம், பிடி ராஜன் சாலையின் ஒரு பகுதி, அசோக் நகர் 1வது அவென்யூ, அசோக் நகர் 9வது அவென்யூ, அசோக் நகர் 11வது அவென்யூ, கன்னிகாபுரம், 80 அடி சாலை, ரஞ்சித் சாலை, மருதை அவென்யூ, சித்ரா நகர், தண்ணீர் தொட்டி காலனி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனி,
கோட்டூர்புரத்தில் 15 மற்றும் 16வது தெரு, புதிய காலனி, பி.எஸ்.என்.எல்., மும்மூர்த்தி நகர், அதிகாரி பாதை, ராமலிங்கம் தெரு, ராணுவ முகாம், பிபிசிஎல், தாஜ் எச்.டி. சேவை, மல்லிகா நகர், ஹரியான் தெரு, பரத் நகர், மாரியம்மன் கோயில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சரோஜினி தெரு,
விஜயாநகர் 1வது தெரு முதல் 10வது தெரு வரை, ராம் நகர் 1வது தெரு முதல் 7வது தெரு வரை, அட்சயம் ஹோட்டல் முதல் மகேந்திரா ஷோ ரூம் வரை பிரதான சாலை வரை, சாரதி நகர், விஜயாநகர் சந்திப்பு, சித்திரம் நகர், டிஏ என்கிளேவ் ஆப்ட், விஜிபி செல்வா நகர், பாலமுருகன் நகர்
கோயம்புத்தூர்:
கோவையில் நாளை தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரையிலான அவிநாசி சாலை வரை, கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரையிலான திருச்சி சாலை, புலியகுளம் சாலைகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் குன்னத்தூர், அதியூர், சுக்ககவுண்டன்புதூர், அருவங்காட்டுப்பாளையம், தளபதி, சொக்கனூர், மேட்டுவலவு, கணபதிபாளையம், நாவக்காடு, கருக்குபாளையம், செம்மாண்டம்பாளையம், பாப்பா வலசு, தேவம்பாளையம் பகுதிகளை நாளை மின்தடை செய்யப்பட உள்ளது.
மதுரை:
எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி மற்றும் கண்மாய்பட்டியில் நாளை பராமரிப்பு பணிக்காக மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் சோழசிரமணி பகுதியில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது.
மேலே கூறிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சில பகுதிகளிலும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சில பகுதிகளிலும் மின்தடை செய்யப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் பணிகளை அதற்கேற்றவாறு முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது ஆகும்.





















