முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய மனு ஒத்திவைப்பு!

திருமண ஆசைகாட்டி மோசடி செய்ததாக நடிகை அளித்த புகாரில் பதிவான வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. 

FOLLOW US: 

திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை கருவுறச் செய்து ஏமாற்றியதாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் நடிகை ((சாந்தினில்ல் அளித்த புகாரின் அடிப்படையில், அதிமுக-வை சேர்ந்த  முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என  நடிகை சாந்தினி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜூன் 9-ஆம் தேதி வரை மணிகண்டனை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய மனு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சரின் முன் ஜாமீன் மனு, நீதிபதி அப்துல்குத்தூஸ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஞா சத்யன், 12 ஆண்டுகள் அரசு மருத்துவராக பணியாற்றி, பின் அரசியலுக்குள் நுழைந்தவர் என்றும்,  புகாரில் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை பொறுத்தவரை திருமணமானவர் என தெரிந்துதான், அவருடன் நடிகை சாந்தினி குடும்பம் நடத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. நடிகையை காயப்படுத்தியதாக கூறுவதற்கு எந்த மருத்துவ ஆதாரங்களும் இல்லை என்றும், நடிகையை தெரியும், ஆனால் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும், தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் உள்ள தகவல்படி, அறிமுகம் ஆன மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்டுள்ளது எப்படி சாத்தியம் என்றும், கரு உருவாகும் முன் எப்படி கருக்கலைப்பு செய்ய முடியும் என்றும் மணிகண்டன் கேள்வி எழுப்பப்பட்டது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய மனு ஒத்திவைப்பு!

உதைத்ததாக புகாரிலும் கூறப்படவில்லை என்றும், நடிகையின் கருவுக்கு யார் காரணம் என கண்டுபிடிக்க வேண்டும் என்றும், தான் குற்றவாளி என்பதற்கு முகாந்திரம்  இருந்தால் கைது செய்யட்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது. திருமணமாகாதவன் என்று நடிகையிடம் கூறவில்லை என்றும், அவரை நம்ப வைத்து ஏமாற்றியதாக கூற முடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. எந்த மிரட்டலும் விடுக்கவில்லை என்றும், ஏப்ரல் 15 வரை தன்னுடன் வசித்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. குற்றச்சாட்டுக்கு உள்ளான தன் தரப்பு விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கியிருக்க வேண்டும் என்றும், ஆரம்பகட்ட விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என்றும்,  விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும்,  இடைக்கால பாதுகாப்பாக முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மணிகண்டன் கோரிக்கை வைக்கப்பட்டது.

காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், 2017-இல் பரணி என்பவர் மூலம் மணிகண்டனுக்கு அறிமுகம் ஆன நடிகை, மலேஷியாவின் தென் மாநில தூதராக உள்ளதாகவும், மலேஷியாவில் முதலீடு தொடர்பாக சந்தித்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி மணிகண்டன் ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தது, உதைத்ததால் படுகாயம், விசாரானை ஆரம்பநிலையில் உள்ளது, ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது, சாந்தினி மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  எனவே காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதால், கைது செய்யும் அவசியம் உள்ளதால் முன் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மூன்று முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கிய சாட்சிகள் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும், ஆதாரங்கள் சேகரிக்க வேண்டியுள்ளதாகவும் முக்கிய பதவியை வகித்ததால் சாட்சிகளை கலைக்கக்கூடும் என்றும் வாதிடப்பட்டது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய மனு ஒத்திவைப்பு!

சாந்தினி தரப்பில் வழக்கறிஞர் ராகவாச்சாரி, ஆதரிக்க திருமணம் செய்துகொள்வதாக தோற்றத்தை ஏற்படுத்தியதால் உறவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார் என விளக்கம் அளித்தார். திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை மீறினால், உறவுக்கு அளித்த ஒப்புதலை ஒப்புதலாக கருத வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார். முதலில் சாந்தினி யார் என தெரியாது என கூறியவர், பிறகு சந்தித்ததை ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் சுட்டிக்காட்டினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல்  செய்ய உத்தரவிட்டு, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

Tags: chennai bail petition minister Manikandan Postponement

தொடர்புடைய செய்திகள்

BJP Defamation Case: பாஜக அவதூறு செய்தி: தினமலருக்கு கண்டனம் தெரிவித்த சிடி ரவி!

BJP Defamation Case: பாஜக அவதூறு செய்தி: தினமலருக்கு கண்டனம் தெரிவித்த சிடி ரவி!

ஆளுக்கு ஒரு மரம்..! மாணவர்கள் வளர்க்கும் மரங்களால் சோலையானது விளாத்திகுளம் அரசுப்பள்ளி..!

ஆளுக்கு ஒரு மரம்..! மாணவர்கள் வளர்க்கும் மரங்களால் சோலையானது விளாத்திகுளம் அரசுப்பள்ளி..!

மக்ரூன் எவ்வளவு பிடிக்கும்? தூத்துக்குடின்னாலே இதுதான் ஸ்பெஷல்..!

மக்ரூன் எவ்வளவு பிடிக்கும்? தூத்துக்குடின்னாலே இதுதான் ஸ்பெஷல்..!

இலங்கை தொடுக்கும் கடல் அரசியல் : மீனவர் உயிருக்கு ஆபத்தா ?

இலங்கை தொடுக்கும் கடல் அரசியல் : மீனவர் உயிருக்கு ஆபத்தா ?

முன்மாதிரியாக விளங்குகிறது திருவாரூர் கிராமம் - அமைச்சர் மா.சுப்ரமணியன் பேச்சு..!

முன்மாதிரியாக விளங்குகிறது திருவாரூர் கிராமம் - அமைச்சர் மா.சுப்ரமணியன் பேச்சு..!

டாப் நியூஸ்

Sivakasi Jayalakshmi Cheating Case: ‛என்னையே ஏமாத்திட்டாங்க...’ 10 ஆண்டுகளுக்கு பின் ‛கம் பேக்’ சிவகாசி ஜெயலட்சுமி!

Sivakasi Jayalakshmi Cheating Case: ‛என்னையே ஏமாத்திட்டாங்க...’ 10 ஆண்டுகளுக்கு பின் ‛கம் பேக்’ சிவகாசி ஜெயலட்சுமி!

கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கு: மாஜி அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு தள்ளுபடி

கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கு: மாஜி அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு தள்ளுபடி

Girl Harassment Case: ‛கன்’னும் என்னோடது தான்... பொண்ணும் என்னோடது தான்... போக்சோ காமுகன் எஸ்.ஐ., சதீஷ் கதை!

Girl Harassment Case: ‛கன்’னும் என்னோடது தான்... பொண்ணும் என்னோடது தான்... போக்சோ காமுகன் எஸ்.ஐ., சதீஷ் கதை!

கிஷோர் கே சுவாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

கிஷோர் கே சுவாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு