Pongal Parisu Thogai: பொங்கல் பரிசு ரெடி! திட்டத்தை நாளை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..!
Pongal Parisu Thogai: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
Pongal Parisu Thogai: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு:
தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.
பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும். அதே போல் இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரொக்கம் ரூ.1000 பொங்கல் பரிசாக தரப்படுகிறது. பொங்கல் பரிசுடன் வழங்கப்படும் ரூ.1000 தொகை சில கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.
குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000:
கடும் நிதி நெருக்கடி இருப்பதாக தெரிவித்த அரசு, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால் தற்போது மக்களின் கோரிக்கை முன்னிட்டு இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு பொதுமக்கள் ரேசன் கடைகளில் கூட்டமாக கூடி விடக்கூடாது என்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த 7ஆம் தேதி முதல் இன்று வரை தகுதியான அனைவருக்கும் டோக்கன் வழங்கி முடிக்கப்பட்டுள்ளது. ரேசன் கடை ஊழியர்கள் இன்றும் வீடு வீடாக சென்று டோக்கன்களை வழங்கினார்கள்.
நாளை தெடங்கி வைக்கும் முதல்வர்:
கடந்த மூன்று நாட்களாக வழங்கப்பட்ட டோக்கனில் எந்தெந்த தேதியில் பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு நேரில் சென்று ரூ.1000 பணத்துடன் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் நாளை காலை 9.30 மணிக்கு பொங்கல் பரிசை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். நாளை காலை 9.30 மணிக்கு ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனி ரேசன் கடையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் வந்து பொதுமக்கள் ரூ.1000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.