Pongal 2025: ஒரே குஷி.. ஊரே பிசி! நாளைக்கு மட்டும் இத்தனை விசேஷமா? Vibeதான்!
Pongal 2025: தைத் திருநாளான நாளை பொங்கல், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மற்றும் மகரஜோதி உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உலகெங்கும் வாழும் தமிழர்களின் முதன்மை பண்டிகையாகவும், முக்கியமான திருநாளாகவும் இருப்பது பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் நன்னாளை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் இளைஞர்கள், கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் இந்த பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
ஜனவரி 14ம் தேதியான நாளை பொங்கல் உள்பட 3 முக்கியமான விசேஷங்கள் வருகிறது.
பொங்கல்:
தரணி எங்கும் வாழும் தமிழர்களின் அடையாளமாக திகழ்வது தைத் திருநாள். தை மாதத்தின் முதல் நாளை பொங்கலாக கொண்டாடுவது மரபாக உள்ளது. உழவுக்கும், உணவுக்கும் ஆதாரமாக திகழும் சூரியனை இந்த நாளில் போற்றி பொங்கல் வைக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். காலையிலே பொங்கல் வைத்து மக்கள் இந்த பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:
பொங்கல் என்றாலே கரும்பு நினைவுக்கு வருவது போலவே ஜல்லிக்கட்டு மற்றொரு அடையாளமாக உள்ளது. தை முதல் நாள் தினத்தில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். ஜல்லிக்கட்டு என்றாலே அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது ஆகும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவனியாபுரத்தில் 1100 காளைகள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. போட்டியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகரஜோதி:
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப்புகழ்பெற்றது ஆகும். சபரிமலையில் நடக்கும் மகர ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்த மகரஜோதி நிகழ்வை காண இந்தியா முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள். நடப்பாண்டிற்கான மகரஜோதி நாளை கொண்டாடப்படுகிறது. மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். மகரஜோதி பண்டிகையை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாளை ஒரே நாளில் பொங்கல், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மற்றும் மகரஜோதி கொண்டாடப்பட உள்ளதால் மக்கள் மிகுந்த உற்சாகத்துடனும், அதேசமயம் பரபரப்புடனும் உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

