மேலும் அறிய

சாதனை படைத்த புதுவை பல்கலைக்கழகம்.. டைம்ஸ் தரவரிசையில் முன்னேற்றம்

உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை புகழ்பெற்ற டைம்ஸ் (TIMES) உயர் கல்வி (THE) நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில், புதுவை பல்கலைக்கழகம் முன்னேற்றம் கண்டுள்ளது.

புகழ்பெற்ற டைம்ஸ் (TIMES) உயர் கல்வி (THE) நாளிதழ் உலகப் பல்கலைக்கழகங்களை மதிப்பீடு செய்து அதன் தரவரிசை பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் (SDGs) அடிப்படையில், பல்கலைக்கழகங்களை மதிப்பீடு செய்து வெளியிடப்பட்டுள்ளது.

உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியல்:

இதில், இந்தியாவிலிருந்து 135 பல்கலைக்கழகங்ககள்; உட்பட 130க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 2526 பல்கலைக்கழகங்கள் பங்கேற்றன. புதுவை பல்கலைக்கழகம் தொடக்கத்திலிருந்தே இந்த தரவரிசை கட்டமைப்பில் தீவிரமாக ஈடுபட்டு, குறிப்பிடத்தக்க உலகளாவிய செல்வாக்கை அடைந்துள்ளது.

புதுவைப் பல்கலைக்கழகம் சமீபத்திய தரவரிசையில் கடந்த ஆண்டின் 64.5 - 69.8 மதிப்பெண் வரம்பை விட முன்னேறி, இந்த ஆண்டு 65.6 - 70.2 மதிப்பெண் அளவில் 601-800 தரவரிசை வரம்பில் உயர்வடைந்துள்ளது. பல்கலைக்கழகம் முக்கியமான தொலைநோக்குச் செயல்களில் (SDGs) குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது.

குறிப்பாக, நிலத்தில் உயிர்கள் பாதுகாப்பு (Life on Land) குறிக்கோளில் 101-200, வறுமையின்மை (No Poverty) குறிக்கோளில் 301-400 மற்றும் பெண்கள் சமத்துவம் (Gender Equality) குறிக்கோளில் 401-600 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

சாதனை படைத்த புதுவை பல்கலைக்கழகம்:

புதுவைப் பல்கலைக்கழகம், க்யூஎஸ் (QS) உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2026-ல் உலகளவில் 1201-1400க்கு இடையில் இடம் பெற்றுள்ளது. இதில் 106 நாடுகளைச் சேர்ந்த 8467 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்தியாவிலிருந்து க்யூஎஸ் உலக தரவரிசை 2026-ல் இடம் பெற்ற 54 பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் புதுவை பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.

புதுவைப் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அனைத்து அளவுகோள்களிலும் முக்கியமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. குறிப்பாக, நிலைத்தன்மை (Sustainability), பன்னாட்டு ஆராய்ச்சி இணைப்பு (International Research Network), மற்றும் “பணியிடத்துக்கு ஒரு பேராசிரியருக்கான மேற்கோள்கள்” (Citation Per Faculty) ஆகிய தரவுகளின் அடிப்படையில் உலக அளவில் 545வது இடத்தைப் புதுவைப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. இது, புதுவை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை பிரதிபலிக்கிறது.

புதுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு, இது குறித்துத் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்ததோடு, இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Embed widget