மேலும் அறிய

அ.தி.மு.க. வாக்குகளை குறிவைக்கும் பிரதமர் மோடி - எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை புகழ்ந்தது ஏன்?

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

பாஜகவுக்கு சவாலாக மாறிய தமிழ்நாடு:

ஆனால், பாஜகவுக்கு தமிழ்நாடு பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, கூட்டணியில் இருந்து அதிமுக விலகியிருப்பது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால், அது தோல்வியில் முடிவடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இருப்பினும், எப்படியாவது கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கும் முனைப்பில் பாஜக இருந்து வருகிறது. ஆனால், ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸை தவிர்த்து பாஜக கூட்டணியில் புதிதாக யாரும் இணையவில்லை. 

இந்த நிலையில், என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, திமுக, காங்கிரஸ், I.N.D.I.A கூட்டணி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அதிமுக வாக்குகளை குறிவைக்கு பிரதமர் மோடி:

அனைவரையும் வியப்படைய செய்யும் வகையில், முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார். விரிவாக பேசிய பிரதமர் மோடி, "தமிழ்நாடு வந்திருக்கும் இந்த வேளையில் எம்ஜிஆரை நினைத்துப் பார்க்கிறேன். இலங்கைக்கு சென்றபோது எம்.ஜி.ஆர். பிறந்த இடமான கண்டிக்கு சென்றேன். இன்று அவர் வாழ்ந்த தமிழகத்திற்கு வந்துள்ளேன். கல்வித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியவர் அவர். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வரவில்லை. 

ஏழைகள் பெண்களுக்கு எம்.ஜி.ஆர். செய்த நன்மைகள் அதிகம். ஏழைகளுக்கு தரமான மருத்துவ வசதியை எம்.ஜி.ஆர். ஏற்படுத்தினார். அவரை கேவலப்படுத்தும் விதமாக தற்போது ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக எம்ஜிஆரை அவமதிக்கிறது. திமுக அரசியலால் தமிழ்நாட்டுக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.

அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எம்.ஜி.ஆருக்கு பிறகு சிறப்பான ஆட்சியைத் தந்தவர் ஜெயலலிதா. எம்ஜிஆர், ஜெயலலிதா சிறந்த ஆட்சியை தந்தனர். நல்லாட்சி தந்து தமிழ்நாட்டுக்கு கல்வியையும் சுகாதாரத்தையும் கொடுத்துள்ளனர்" என்றார்.

 மீண்டும் கூட்டணியா?

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி பேசியது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே, அதிமுகவுடன் பாஜக ரகசிய கூட்டணி வைத்திருப்பதாக திமுக கூறி வரும் சூழலில், அதிமுக குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத பிரதமர் மோடி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை குறிப்பிட்டு பேசியது பல சந்தேகங்களை கிளப்பும் விதமாக உள்ளது என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். பிரதமர் மோடியின் பேச்சால் தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க.  - பா.ஜ.க. கூட்டணி உருவாகுமா? என்ற கேள்வி எழுப்பியுள்ளது.

ஆனால், அதிமுக வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்கவே பிரதமர் மோடி இப்படி பேசியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush
AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Musk on World War: “இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
“இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
Russia Vs Europe: “நாங்க இப்போவே ரெடி, போருக்கு வர்றீங்களா.? ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த புதின் - என்ன நடந்தது.?
“நாங்க இப்போவே ரெடி, போருக்கு வர்றீங்களா.? ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த புதின் - என்ன நடந்தது.?
Trump Vs Joe Biden: “செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
“செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
Embed widget