மேலும் அறிய

Pink Bus : மகளிர் பேருந்தின் எல்லாப் பக்கங்களிலும் பிங்க் கலர்.. விமர்சனம் எழுந்ததால் தமிழ்நாடு அரசு முடிவு

விமர்சனம் எழுந்ததை அடுத்து, மகளிர் பேருந்தின் எல்லாப் பக்கங்களிலும் பிங்க் வண்ணம் பூச அரசு முடிவு செய்துள்ளது.

விமர்சனம் எழுந்ததை அடுத்து, மகளிர் பேருந்தின் எல்லாப் பக்கங்களிலும் பிங்க் வண்ணம் பூச அரசு முடிவு செய்துள்ளது.

தலைநகர் சென்னையில் இலவசப் பேருந்துகளுக்கு இனி ”பிங்க்” நிறத்துக்கு மாற்றப்படும் எனப் பெரு நகரப் போக்குவரத்துக் கழகம் அண்மையில் அறிவித்தது. எந்தப்பேருந்து கட்டணமில்லாப் பேருந்து என்று கண்டறிவதில், பெண்களின் சிரமத்தைக் குறைக்க அரசு முடிவு செய்த நிலையில், முன்பும் பின்பும் மட்டும் பிங்க் வண்ணம் பூசப்பட்டது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

தலைநகர் சென்னையில் பொதுமக்கள் வசதிக்காக பெருநகர போக்குவரத்து கழக (MTC) பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 2021ல் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மாநகர மற்றும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற தங்களின் தேர்தல் பரப்புரை வாக்குறுதிகளில் ஒன்றினை நடைமுறைப்படுத்தியது.  இதன்மூலம் பல பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். குறிப்பாக சென்னையில் அரசுப் பேருந்துகளில் பயணித்து பயன்பெறும்  பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மளமளவென உயர்ந்துள்ளது.

60 சதவீதமாக அதிகரித்த பெண் பயணிகளின் எண்ணிக்கை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, கடந்த ஆண்டு 40 சதவீதமாக இருந்த பெண் பயணிகளின் எண்ணிக்கை தற்போது 60 சதவீதமாக அதிகரித்துள்ளது . இதுதொடர்பாக பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ’’கடந்த ஓராண்டில் 132 கோடிக்கும் அதிகமான பெண்கள் திமுக அரசின் இலவச பயணத் திட்டத்தால் பயன் அடைந்துள்ளனர்.

இந்த திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்தும் வகையில் 1,600 கோடி ரூபாய் அளவிற்கு மானியமாக தமிழக அரசால்  ஒதுக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசின் இந்த இலவச பயணத் திட்டத்தால் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மாதந்தோறும் குறைந்தது ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க உதவிகரமாக இருக்கிறது. இந்த சேமிப்பு தொகை அவர்களின் குடும்ப செலவுகளும் பெரிதும் உதவியாக இருக்கும்’’ என்றார்.

பணம் செலவழித்து பயணம்
 
இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கக் கூடிய பேருந்துகள் பிங்க் நிறத்துக்கு மாற்றப்பட்டன. எனினும் பேருந்தின் முகப்புப் பக்கத்திலும் பின்புறத்திலும் மட்டும் பிங்க் வண்ணம் பூசப்பட்டது. இது சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியது. 
 
Pink Bus : மகளிர் பேருந்தின் எல்லாப் பக்கங்களிலும் பிங்க் கலர்.. விமர்சனம் எழுந்ததால் தமிழ்நாடு அரசு முடிவு
 
இதுதான் திராவிட மாடலா என்றும் சிலர் விமர்சித்தனர். இந்நிலையில் மகளிர் பேருந்தின் எல்லாப் பக்கங்களிலும் பிங்க் வண்ணம் பூச அரசு முடிவு செய்துள்ளது.
 
சென்னையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பெரு நகரங்களில் இந்த திட்டம் தொடரப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பெண்கள் கட்டணமில்லா பயணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வரும் நகரப்பேருந்துகளின் கண்ணாடிகளில் பெண்கள் பயணம் செய்ய கட்டணம் இல்லை என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget