கரூரில் மக்கள் குறைத்தீர் கூட்டத்திற்கு செருப்பு மாலை அணிந்து வந்த நபரால் பரபரப்பு
’’தண்ணீரில் இயங்கும் வெல்டிங் மிஷினை கண்டுபிடித்த ரகுநாதன் தான் கண்டுபிடித்த கருவிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் அதற்கு கடனுதவி தேவைப்படுவதாகவும் மனுவில் கோரிக்கை’’
![கரூரில் மக்கள் குறைத்தீர் கூட்டத்திற்கு செருப்பு மாலை அணிந்து வந்த நபரால் பரபரப்பு People in Karur were disturbed by a person who came to the meeting with a garland of shoes கரூரில் மக்கள் குறைத்தீர் கூட்டத்திற்கு செருப்பு மாலை அணிந்து வந்த நபரால் பரபரப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/24/1b0c3b8a7b1f890f0ea846927ec5e9b1_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரனோ வைரஸ் பரவல் காரணமாக தமிழக அரசு தமிழகம் முழுவதும் வாராந்திர குறைதீர் கூட்டத்தை ரத்து செய்து அறிவிப்பு செய்தது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் வாராந்திர குறைதீர் நாளில் பொதுமக்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை அதற்காக அமைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தலாம் என அறிவிப்பு செய்தது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மக்கள் தொகை கணக்கெடுப்பு சமுதாய ரீதியாக எடுக்கப்பட்ட வேண்டும் - மதுரை கிளை நீதிபதிகள் கருத்து
அதன் அடிப்படையில் இன்று பொதுமக்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை அதற்காக அமைத்த பெட்டியில் செலுத்தி விட்டு சென்றனர். அப்போது, கரூர் அடுத்த ஆண்டான்கோவில் புதூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் ரகுநாதன் என்பவர் செருப்பு மாலை அணிந்து மனுவை எடுத்து வந்தார். இதனை கண்ட காவல்துறையினர் அவரை தடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தண்ணீரில் இயங்கும் வெல்டிங் மெஷின் கண்டுபிடித்து மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து அதற்கான பாராட்டையும் பெற்றவர் என்பது தெரியவந்தது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- நாகை மீனவர்களை இரும்பு பைப்பை கொண்டு தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்
ரகுநாதன் தற்போது வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்த கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் எந்த வேலையும் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாகவும், தான் கண்டுபிடித்த மெஷினுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். அல்லது தனக்கு கடனுதவி வழங்க வேண்டும் என கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்த அவர், இந்த விரக்தியால்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுவுடன் செருப்பு மாலை அணிந்து உதவி கேட்டு வந்ததாக தெரிவித்தார்.
அப்போது, பணியில் இருந்த தனிப்படை காவல்துறையினர் தற்போது கொரனோ காலம் என்பதால் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வாய்ப்பில்லை எனவும், தங்கள் குறைகள் குறித்த மனுவை பெட்டியில் செலுத்தி விட்டு செல்லுமாறு கூறினர். மேலும், இது போன்று அநாகரிகமாக செயல்படக் கூடாது எனவும் அறிவுறுத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர் செருப்பு மாலை அணிந்து வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)