ஐபசியில் பிறந்திருக்கீங்களா? எந்த திசை வாசல் ராஜயோகம்!
கிழக்கு பார்த்த வாசல் வைத்த வீடாக இருந்தால் அவர் தெற்கு பார்த்து அமரலாம் அல்லது மேற்கு பார்த்து அமரலாம்...

ஐபசியில் பிறந்திருக்கீங்களா? எந்த திசை வாசல் ராஜயோகம்!
அன்பார்ந்த வாசகர்களே ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு திசையில் வீட்டு வாசல் அமைப்பது நன்மையை தரும் ஆனால் அவருடைய பிறப்பு ஜாதகத்தில் எந்த கிரகம் ஆட்சி உச்சம் பெற்று நாலாம் இடத்துள் தொடர்பு பெற்று இருக்கிறது அந்த கிரகத்தின் திசை அல்லது பாவகத்தின் திசையை பொதுவாக வீட்டு வாசலுக்கு வைப்பார்கள்...
தற்பொழுது ஐப்பசி மாதத்தில் பிறந்திருக்கக் கூடிய ஜாதகர்களுக்கு ஒரு ஜாக்பாட் திசையை பற்றி கூறப்போகிறேன் அதாவது கிழக்கு சூரியன் உதயமாகும் இடம் அல்லது உதிக்கும் திசை என்று கூறலாம் அதற்கு எதிர் திசையான மேற்கு ஐப்பசி மாதத்தில் பிறந்த ஜாதகருக்கு ராஜயோகத்தை உண்டாக்கும்... தெற்கு பார்த்த வீடாக இருக்கிறது என்றால் மேற்கை நோக்கி ஜாதகர் அமரலாம் அல்லது வடக்கை நோக்கி அமரலாம் இது அவருடைய வாழ்வில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும்....
கிழக்கு பார்த்த வாசல் வைத்த வீடாக இருந்தால் அவர் தெற்கு பார்த்து அமரலாம் அல்லது மேற்கு பார்த்து அமரலாம் இந்த திசையும் அவருக்கு பெரிய ராஜயோகத்தை கொண்டு வரும்... ரிஸ்க் எடுக்க வேண்டும் மேற்கு பார்த்து அமரலாமா யாரேனும் இப்படி பரிந்துரைப்பார்களா என்ற யோசனைகள் தோன்றலாம் ஆனால் நாம் பார்த்த பல ஆயிரம் ஜாதகங்களில் இது போன்ற அமைப்புகள் நன்றாக வருவதை நாம் பார்த்திருக்கிறோம்...
விளக்கேற்றும் திசை:
ஐப்பசி மாதம் பிறந்தவர்கள் வடக்கு நோக்கி விளக்கை ஏற்றி வந்தால் அவர்களுக்கு வாழ்க்கை வளமாகும் பொருளாதார உயர்வு ஏற்படும் முன்னேற்றமான வாழ்க்கை அமையும்... பொதுவாக சாமி எந்த திசையில் இருக்கும் என்பதை பார்த்து அவர்களுக்கு நேராக விளக்கேற்றுவது நல்லது... ஐப்பசியில் பிறந்தவர்களுக்கு இடம் விட்டு இடம் போவது ஊர் விட்டு ஊரு மாறுவது மிகப்பெரிய யோகத்தை கொண்டு வரும் அதே போல வேலையில் மிகச்சிறந்த ஆட்களாக திகழ்வார்கள்...
சூரியன் துலாத்தில் இருக்கும் பொழுது மேற்கு திசை மட்டுமே உங்களுக்கு பெரிய மாற்றத்தை கொண்டு வருமா என்றால் இல்லை சிலருக்கு நீட்ச பங்க ராஜயோகம் பெற்றிருக்கும் அமைப்பினால் கிழக்கு திசை மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுத்து விடும் அதனால் முறையான ஒரு ஜோதிடரை அணுகி உங்களுக்கான ஏற்ற திசை எது என்பதை பற்றி நன்றாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் மாற்றத்தை எதிர்பாருங்கள்... எதிர்காலம் குறித்தான கவலை பலருக்கு ஏற்படலாம் அல்லது இருக்கலாம் ஐப்பசியில் பிறந்தவர்கள் பொறுத்த வரை வேளையில் ஜாம்பவான்களாக திகழ்பவர்கள் பணம் எப்பொழுதும் அவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும்...
இன்னும் சில பரிகாரங்களை பற்றி நாம் பேசுவோமானால் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கின்ற குரு பகவான் மிக சிறப்பான காரியங்களை செய்து கொடுப்பார் ஐப்பசி மாதங்களில் பிறந்தவர்களுக்கு... யாரிடமும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் எவற்றையும் காண்பிக்காமல் அமைதியாக வாழ்க்கையை நகர்த்தி செல்வதில் இவர்கள் சிறந்தவர்கள்....
வீட்டின் திசை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்வார்கள் ஆனால் வீட்டின் தலைவருக்கு எந்த திசை ஏற்றதோ அந்த திசையில் வீட்டின் முக்கிய வாசல் அமைந்திருந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை கொண்டு வரும்… ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை துணை மிக சிறப்பான அமைப்பைக் கொண்டு வீட்டை கட்டி எழுப்ப உதவி புரிபவர்களாக இருப்பார்கள் ஆகையால் வாழ்க்கைத் துணையுடன் சில விஷயங்களை கலந்து ஆலோசிப்பது நல்லது…





















