Pen Monument Rules: பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசின் நிபந்தனைகள் என்னென்ன? முழு விவரம்
Pen Monument Rules: மெரினாவில் பேனாச்சின்னம் அமைக்க மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
Pen Monument Rules: மெரினாவில் பேனாச்சின்னம் அமைக்க மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசின் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பேனா நினைவுச்சின்னம்:
ரூபாய் 81 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள இந்த பேனா சிலைக்காக கடலில் நடுவே 8 ஆயிரத்து 551 சதுர மீட்டர் இடம் பயன்படுத்தப்பட உள்ளது. கடலின் நடுவே அமைக்கப்பட உள்ள இந்த பேனா சின்னத்திற்கு மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பேனா நினைவுச்சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதி தேவைப்படும் திட்டங்களை பற்றி விவாதிக்க 14 உறுப்பினர்களை கொண்ட நிபுணர் மதிப்பீடு குழு ஏப்ரல் 17ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டது. அதன் பின்னர் தற்போது மதிபீட்டுக் குழுவின் பரிந்துரையை அடுத்து மத்திய அரசு நிபந்தனைகளுட்ன அனுமதி அளித்துள்ளது.
நிபந்தனைகள் என்னென்ன?
- பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஐஎன்எஸ் அடையாறு கடற்படைத் தளத்தில் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.
- நினைவுச் சின்னம் அமைக்க எந்தவொரு நிலையிலும் நிலத்தடி நீரைப் பயன்படுத்தக் கூடாது.
- நினைவுச் சின்ன திட்டத்தினை செயல்படுத்தும் போது 15 பேர்கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படவேண்டும்.
- கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்குட்பட்டு கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.