மேலும் அறிய

Pen Monument : மெரினாவில் பேனா சின்னம்; விரைவில் கட்டுமானப் பணி; பொதுப்பணித்துறை தகவல்..!

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவாக மெரினாவில் பேனா சின்னம் நிறுவப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவாக மெரினாவில் பேனா சின்னம் நிறுவப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கான அனுமதி மத்திய அரசு தரப்பில்  வழங்கப்பட்டுள்ள நிலையில் பேனா சின்னம் அமைப்பத்தற்கான பணிகள் இன்னும் மூன்று மாதத்தில் தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக் கூறப்பட்டுள்ளது. 

பேனா சின்னம் அமைப்பதற்கான மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கிடைத்துள்ள நிலையில், தற்போது டெண்டர் விடும் பணிகள் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஐஐடி ஊழியர்களைக் கொண்டு விரைவில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையம் 15 நிபந்தனைகள் உடன் இந்த அனுமதியை வழங்கியது. சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் தந்த நிலையில், கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கியது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் ரூ.81 கோடி செலவில் பேனா சின்னம் அமைய உள்ளது. 

நிபந்தனைகள் என்ன?

  • கட்டுமானம் தொடங்குவதற்கு முன் திட்டம் தொடங்க உள்ள இடத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ளஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்
  • மண் அரிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்
  • கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக்கூடாது
  • பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதனை நிர்வகிப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்
  • தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்
  • நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்த தகவல்களை பொதுப்பணித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
  • நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் எந்த உத்தரவும் அல்லது வழிகாட்டுதலும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்
  • திட்டத்தை செயல்படுத்தும்போது நிபுணர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்
  • அவசரகால மீட்புப் பணி  தொடர்பான விரிவான திட்டம் தீட்டப்பட வேண்டும்
  • ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது
  • தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதி கடிதம் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது. உள்ளிட்ட நிபந்தனைகள் அனைத்தையுமே உரிய முறையில் பின்பற்ற வேண்டும், தவறினால் அனுமதி ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசின் திட்டம்:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அதில் பெரும்பாலானோர் திட்டத்தை செயல்படுத்த ஆதரவு அளித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VJ Chitra Father Suicide | மீள முடியாத சோகம்..VJ சித்ரா தந்தை தற்கொலை! துப்பட்டாவில் பிரிந்த உயிர்..Kumbakonam Mayor Chest Pain | ’’ஐயோ..நெஞ்சு வலி’’சுத்துப்போட்ட கவுன்சிலர்கள்..தரையில் புரண்ட மேயர்TTV Dhinakaran : ’’EPS-க்கு முதல் எதிரி நான்தான்!அதிமுக முழுக்க SLEEPER CELLS’’ - டிடிவி”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை!  மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை! மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!
இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!
மிகப்பெரிய சங்கடம்... மேயருக்கு எதிராக தீர்மானம்
மிகப்பெரிய சங்கடம்... மேயருக்கு எதிராக தீர்மானம்
New Year 2025:
New Year 2025: "இருங்க பாய்" மொமண்டில் கம்பேக் கொடுக்கனுமா? 2025ல் இதை மட்டும் பண்ணுங்க!
Embed widget