மேலும் அறிய

Parandur Airport: பரந்தூர் விமான நிலையம் கொண்டு வர என்ன காரணம்..? விளக்கம் கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

விமான நிலையம் பரந்தூர் கொண்டு வந்ததற்கான காரணம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் கொடுத்தார்.

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். அப்போது பேசிய எம்.எல்.ஏ வேல்முருகன், “எந்த ஒன்றிய அரசும் நிலங்களை கையகப்படுத்தும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதே இல்லை.  மாநில அரசு சொன்னால் செய்யும். எனவே மாநில அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்தினை வேறு இடத்திற்கு மாற்றம் செய்திட வேண்டும். அல்லது பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்” எனத் தெரிவித்தார். 

அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்த விளக்கம்: 

சென்னை விமான நிலையம் நாட்டிலேயே 3ம் இடத்தில் இருந்தது. தற்போது 5ம் இடத்தில் உள்ளது. சரக்குகளை கையாளும் திறனில் சென்னை விமான நிலையம் 7 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அண்டை மாநிலங்களில் புதிய விமான நிலையம் இருப்பதால்தான் வளர்ச்சி பெற்று வருகின்றன.  30 ஆண்டுக்கான தேவையை இப்போது நாம் கட்டமைக்க வேண்டியது அவசியம். 10 கோடி  பயணிகளை கையாளும் வகையில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுகிறது. தற்போது உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் உள்ளதால் புதிய விமான நிலையம் அமைப்பது அவசியம். 

இந்தியாவில் பல மாநிலங்களில் விமான நிலையங்கள் நகரங்களில் இருந்து தொலைவில் தான் இருக்கின்றன. பரந்தூர் விமான நிலையம் 60 கி.மீ தள்ளி வருவதற்கு காரணம் இருக்கிறது. சென்னையை சுற்றியுள்ள பகுதிகள் விளைநிலங்களாக இருப்பதால் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 

பரந்தூர் விமான நிலையம்: 1998 ஆண்டு தொடங்கிய சென்னை இரண்டாம் விமானம் நிலையம் பேச்சு .. கடந்து வந்த பாதை இதுதான்..!

  • 1998 ஏப்ரல் மாதம் மத்திய விமான துறை அமைச்சர் ஆனந்தகுமார் சென்னைக்கு இரண்டாவது ஏர்போர்ட் தேவைப்படுகிறது என முன்மொழிந்தார்.
  • 1998 அக்டோபர் மாதம் சென்னை இரண்டாவது விமான நிலையம் தொடர்பாக  முதல் உயர்மட்ட குழு கூட்டமானது நடைபெற்றது. இதில் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் தேவை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
  • 1998 அக்டோபர் மாதம் அப்பொழுதைய தமிழ்நாடு முதலமைச்சர்  கருணாநிதி, பிரதமர் வாஜ்பாய்க்கு, சென்னை இரண்டாவது விமான நிலையம் தொடர்பாக  பணிகளை முன்மொழிவுக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்
  • 1998 அக்டோபர் மாதம், தமிழ்நாடு  தொழில் வளர்ச்சி துறை ஆணையம் ,  சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம்  தெற்கு பகுதில் 10 கிலோமீட்டர் தூரத்தில் இடம் ஒன்றை தேர்வு செய்தனர். 1999 நவம்பர் மாதம் 2000 கோடி செலவில் புதிய சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2000 நவம்பர் மாதம் போரூர் அருகில் மேற்கு மீனம்பாக்கத்தில்  3000 ஏக்கரில் , அமைய உள்ளதாக தகவல்  வெளியானது.
  • 2005 ஏப்ரல் மாதம் சென்னை விமான நிலையத்தில் வடக்கே, சுமார் 1457 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது .
  • 2007 மே மாதம் அப்பொழுதைய தமிழ்நாடு முதலமைச்சர்  கருணாநிதி ,காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே  4820 ஏக்கர் பரப்பளவில், பசுமை விமானம்  நிலையம் அமைக்க முடிவு செய்தார்.
  • 2012 மார்ச் மாதம்  சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு சுமார் 20 ஆயிரம் கோடி ஆகும் என தமிழ்நாடு அரசு  திட்டம் தீட்டியது.
  • 2022 ஜனவரி மாதம் தமிழ் நாட்டில்  4 இடங்கள் தேர்வு செய்தனர். படாளம், திருப்போரூர் , பன்ணுர் ,பரந்தூர் ஆகிய இடங்களை தேர்வு செய்தனர்.
  • 2022 மார்ச் மாதம்  அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் ஆய்வு  மேற்கொண்டனர்.
  • 2022 ஆகஸ்ட் மாதம் சென்னை அருகே ஶ்ரீபெரும்புதூர் அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைக்கப்படும் என்று ராஜ்யசபாவில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
Embed widget