OPS Letter: அப்படியே அந்த வந்தே பாரத் ரயிலை குமரி வரை நீடிக்க வேண்டும் - பிரதமருக்கு ஓபிஎஸ் கடிதம்..
சென்னை முதல் நெல்லை வரை இருக்கும் வந்தே பாரத் ரயில் சேவையை கன்னியாகுமரி வரை நீடிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
![OPS Letter: அப்படியே அந்த வந்தே பாரத் ரயிலை குமரி வரை நீடிக்க வேண்டும் - பிரதமருக்கு ஓபிஎஸ் கடிதம்.. OPS has written a letter to Prime Minister Modi urging him to extend the Vande Bharat train service from Chennai to Nellai to Kanyakumari. OPS Letter: அப்படியே அந்த வந்தே பாரத் ரயிலை குமரி வரை நீடிக்க வேண்டும் - பிரதமருக்கு ஓபிஎஸ் கடிதம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/25/b1831a6298b5996d21b32c08269dba651695623137713589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை முதல் திருநெல்வேலி வரை இயங்கும் வந்தே பாரத் ரயில் சேவையை கன்னியாகுமரி வரை நீடிக்க வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உலகத்தரத்தில் அதிவேகமான ரயில்சேவை என்ற நோக்கில் பொதுத்துறை நிறுவனமான ரயில்வே, வந்தே பாரத் ரயில்களின் சேவையை வழங்கி வருகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் 50 வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் 9 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில், சென்னை - நெல்லை இடையேயான ரயில் சேவையும் அடங்கும்.
வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டன. தமிழ்நாட்டில் ஏற்கனவே, மைசூரு - சென்னை மற்றும் கோவை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயங்கி வருகிறது. அந்த வரிசையில் மூன்றாவது ரயில் சேவையாக சென்னை - நெல்லை இடையேயான ரயில் சேவை தொடங்கப்பட்டது.
வழக்கமாக நெல்லை - சென்னை இடையேயான 650 கிலோ மீட்டர் தூரத்தை ரயிலில் கடக்க 10 மணி நேரமாகும். ஆனால், புதிய வந்தே பாரத் ரயில் ஆனது, இந்த தூரத்தை வெறும் 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடந்து விடுகிறது. இந்த ரயில் பயணத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் வழக்கமான ரயில் டிக்கெட்டிற்கானதை விட அதிகமாகவும், அதேநேரம் பேருந்து டிக்கெட் கட்டணத்திற்கு இணையானதாகவும் உள்ளது. அதன்படி, ஏ.சி.சேர்கார் பெட்டியில் பயணம் செய்ய கட்டணமாக ரூ.1,620 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ஒருவருக்கு 3,025 ரூபாய் ஆகும்.
இந்நிலையில் ஓ பன்னீர்செல்வம் சென்னை முதல் நெல்லை வரை இயங்கும் வந்தே பாரத் ரயில் சேவியை கன்னியாகுமரி வரை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பான கடிதத்தில், “ தொடக்கத்தில், சென்னைக்கும் திருநெல்வேலிக்கும் சென்னைக்கும் விஜயவாடாவுக்கும் இடையே இரண்டு புதிய ரயில்கள் உட்பட நாடு முழுவதும் ஒன்பது வந்தே பாரத் ரயில்களை காணொலி காட்சி மூலம் திறந்துவைத்ததற்காக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் தற்போது 12 மணி நேரமாக இருந்து 8 மணி நேரமாக குறைந்துள்ளது தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இருப்பினும், இதை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று தென் தமிழக மக்கள் விரும்புகின்றனர்.
எனவே வந்தே பாரத் விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறையுமா மின்கட்டணம்; போராட்டத்தில் சிறு, குறு நிறுவனங்கள்: அமைச்சருடன் முதலமைச்சர் ஆலோசனை!
'அண்ணா குறித்த அண்ணாமலை கருத்திற்கு ஏன் திமுக தலைவர்கள் விமர்சிக்கவில்லை?’ - சீமான் கேள்வி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)