உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஒற்றைத் தலைமை பிரச்சினை... தொண்டர்களை சந்தித்த ஓபிஎஸ்
முன்னதாக ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த வைகைச் செல்வன் இபிஎஸ் இல்லத்துக்கு வருகை தந்துள்ளார். இன்று காலை தொடங்கியே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து இபிஎஸ் இல்லம் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் அதிமுக தொண்டர்களை சந்தித்தார்.
ஒற்றைத் தலைமை
அதிமுகவில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தொடர்ந்து இன்று எட்டாவது நாளாக தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முன்னதாக ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த வைகைச் செல்வன் இபிஎஸ் இல்லத்துக்கு வருகை தந்துள்ளார். இன்று காலை தொடங்கியே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து இபிஎஸ் இல்லம் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
முரண்டு பிடிக்கும் இபிஎஸ்
வரும் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினை தலைவிரித்தாடுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் - பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே தர்ம யுத்தமே நடைபெற்று வருகிறது. 'நீயா நானா' என ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் போட்டா போட்டி போட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: “அதிமுகவிற்கு ஒற்றை தலைமைதான் சரி..! இப்படிபட்டவர்தான் வரணும்” - பரபரப்பை கிளப்பிய பாஜகவின் நயினார்!
இச்சூழலில் தலைமையை சமமாக பகிர்ந்து கொள்ளலாம் என ஓபிஎஸ் சொன்னாலும் ஒற்றைத் தலைமை பிரச்சினையை எடப்பாடி தூண்டிவிடுவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.
ஓபிஎஸ் கடிதம்
அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கான தனித் தீர்மானம் இன்று (ஜூன்.21) இறுதி செய்யப்படுவதாகவும், தீர்மானக் குழுக் கூட்டம் இன்று காலை அதிமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக பொதுக்குழுக் கூட்டத்தை தள்ளி வைக்குமாறு ஓபிஎஸ் கடிதம் எழுதிய நிலையில், இபிஎஸ் தரப்பு கூட்டத்தை நடத்துவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கூட்டத்தைப் புறக்கணிப்பது குறித்து ஓபிஎஸ் தரப்பு ஆலோசனை நடத்தி வருவதாகவும், எதிர்ப்பை மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் நீதிமன்றத்தை நாட ஓ.பன்னீர்செல்வம் ஆயத்தமாகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: ’கடிதத்த கையெழுத்து போட்டு வாங்கிட்டு தெரியாதுன்னு எப்படி சொல்லலாம்?’ - கொதித்தெழும் பன்னீர் தரப்பு
“அதிமுகவிற்கு ஒற்றை தலைமைதான் சரி..! இப்படிபட்டவர்தான் வரணும்” - பரபரப்பை கிளப்பிய பாஜகவின் நயினார்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்