OPS - STALIN:’ஓபிஎஸ் நலம்பெற வேண்டும்’ அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் ட்வீட்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நலம்பெற வேண்டும் என குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்
![OPS - STALIN:’ஓபிஎஸ் நலம்பெற வேண்டும்’ அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் ட்வீட் OPS covid should be well', AIADMK coordinator, says chief minister Stalin OPS - STALIN:’ஓபிஎஸ் நலம்பெற வேண்டும்’ அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் ட்வீட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/16/93f84234ac0f8be0dabc04878cbd73dd1657966484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஓ.பன்னீர்செல்வம் நலம் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் விரைந்து முழுமையாக நலம் பெற விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.
#COVID19 தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான திரு. @OfficeOfOPS அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) July 16, 2022
ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி:
லேசான காய்ச்சல் காரணமாக, ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்:
ஓபிஎஸ்-ஐ, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்குவதாகவும், கட்சியை விட்டு நீக்குவதாகவும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதே நேரத்தில் இபிஎஸ்-ஐ கட்சியை விட்டு நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இந்நிலையில்,ஓ.பன்னீர்செல்வத்தை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
திமுக-ஆதரவளிக்கிறதா..!
ஏற்கனவே இபிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ்-ஐ திமுக விற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வத்தை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஓபிஎஸ்-க்கு திமுக ஆதரவளிக்கிறதா என்றும் இபிஎஸ்-ஐ எதிர்க்கிறதா என்றும் பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)