மேலும் அறிய

NEW RATION CARD : புதிய ரேஷன் கார்டு வாங்க காத்திருக்கீங்களா.! விண்ணப்பிக்க மீண்டும் சான்ஸ்- எப்போ தெரியுமா.?

NEW RATION CARD : புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி மற்றும் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையானது தொடங்கப்படவுள்ளது. இதற்கான தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கார்டுகள்

ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மானிய விலையில் உணவுப்பொருட்கள் தான். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 916 நியாய விலை கடைகளில் உள்ள 2 கோடியே 28 லட்சத்து 12,942 ரேஷன் கார்டுகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் ரேஷன் அட்டைகள் முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இதுமட்டுமில்லாமல் அரசின் திட்டங்களான மகளிர் உரிமை தொகை, பொங்கல் பரிசு தொகை, பேரிடர் கால நிவாரண தொகை போன்ற உதவிகளை பெறுவதற்கு ரேஷன் அட்டை முக்கிய அடையாள அட்டையாக உள்ளது.

புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி

இந்த நிலையில் அரசின் திட்டங்களை பெறுவதற்கு புதிய ரேஷன் அட்டை கார்டுகள் கேட்டு பல லட்சம் பேர் விண்ணப்பித்து காத்துள்ளனர். அந்த வகையில் விண்ணப்ப மனுக்களை பரிசீலனை செய்து உரிய ஆவணங்கள் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ரேஷன் கார்டுகளும் கடந்த பிப்ரவரி மாதம் வரை வழங்கப்பட்டது. இதனையடுத்து புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணியானது கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்படவுள்ளது. தற்போது தேர்தல் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களை பரிசீலிக்கும் செயல்முறைகளும், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகளும் வரும் மே 15-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மே 15ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைகள்

மேலும் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முறையான ஆவணங்களோடு தவறுகள் இல்லாமல் வருகிற மே 15ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க சமையல் எரிவாயு இணைப்பு, ஆதார் அட்டை, குடும்பத் தலைவரின் புகைப்படம் கட்டாயம் தேவையாகும். மேலும் முகவரியை உறுதி செய்ய மின்சார கட்டண ரசீது, வாடகை ஒப்பந்தம் ஆகியவை தேவை என கூறப்பட்டுள்ளது. எனவே புதிய ரேஷன் கார்டுகள் வாங்கவும், ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்யவும் பொதுமக்கள் தமிழ்நாடு பொது விநியோக திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpds.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
இன்றைய வானிலை அறிக்கை: இந்த மாவட்ட மக்களே உஷார்... இடி மின்னலுடன் கனமழை வாய்ப்பு!
இன்றைய வானிலை அறிக்கை: இந்த மாவட்ட மக்களே உஷார்... இடி மின்னலுடன் கனமழை வாய்ப்பு!
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Embed widget