Online Rummy Ban: இந்த முறை தப்பாது...! ஆன்லைன் ரம்மி தடை மசோதோவுக்கு புது ப்ளான் போட்ட தமிழக அமைச்சரவை!
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.
2022 -2023 ஆம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கை வரும் 20 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்க செய்யப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் பல்வேறு முக்கிய விசயங்கள் ஆலோசிக்கப்பட்டு நிறைவடைந்தது. இதில் நான்கு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து ஆளுநருக்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2023- 2024- ஆம் ஆண்டு பட்ஜெட் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தியாளர் சந்திப்பின் விவரம்:
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் ரம்மி தடைக்கு மீண்டும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே, சட்டப்பேரவையில் இணையவழி சூதாட்டம் உள்ளிட்டவைகளுக்கு சட்டமுன்வரைவு கொண்டுவரப்பட்டது. ஆனால், ஆளுநர் சட்ட மசோதாவை இயற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்பியுள்ளார். இது தொடர்பாக உயர் நீதிமன்ற பல்வேறு குறைகள் இருப்பதாகவும், போதுமான விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும், அதோடு புதிய சட்டத்தை இயற்ற அரசுக்கு தடையில்லை என்று சொல்லியிருக்கிறது. ஆனால், 33- வது என்ட்ரி படி அரசிற்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். அது உண்மை இல்லை. ஆனால், தமிழ்நாடு அரசிற்கு அதிகாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கேம்ப்ஸ் இரண்டு வெவ்வேறானவை. இது ஸ்கில்டு விளையாட்டுகள் இல்லை. ஸ்கில்டு விளையாட்டுகளில் ஆட்களோடு விளையாட முடியும். ஆனால், ஆன்லைன் ரம்பி அப்படியில்லை. நேரடியாக ஆட்கள் இருக்க மாட்டார்கள். ப்ரோக்ராம்டு விளையாட்டுகள். அதில் எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆன்லைன் ரம்மியால் கடந்த நான்கு மாதத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இணையவழி சூதாட்டம் ஏன் தடை செய்யப்பட வேண்டும் என்பது குறித்து ஆளுநருக்கு உரிய விளக்கம் அளித்திருக்கிறோம். ஆனால், அவர் நான்கு மாதங்கள் கிடப்பில் போட்டு, அதனை திருப்பி அனுப்பியுள்ளார். அதனால், மீண்டும் சட்ட முன்வரைவு கொண்டுவர முடிவு எடுத்துள்ளோம். இந்த ஆன்லைன் தடை சட்டத்திற்கு 95 சதவீத ஆதரவோடு மட்டுமே முடிவெடுக்கப்பட்டது. இந்த விசயத்தில் முடிவெடுக்க தம்ழிநாடு அரசிற்கு அதிகாரம் இருப்பதாக எஸ். ரகுபதி தெரிவித்தார்.
மேலும் வாசிக்க..