மேலும் அறிய
கீழடி: தரைவிட்டுக் கிளம்பும் தமிழன் நாகரீகம்... அமைச்சர் பெருமிதம் !
குகைவிட்டுக் கிளம்பும் புலி, புகைவிட்டுக் கிளம்பும் எரிமலை, உறைவிட்டுக் கிளம்பும் வாள், தரைவிட்டுக் கிளம்பும் தமிழன் நாகரீகம், கீழடியில் தற்போது கண்டறியப்பட்டுள்ள சிவப்பு நிற பெரும் பானை"
சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி தமிழ்நாடு தொல்லியல்துறை துவங்கியது. இதைத் தொடர்ந்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி அருகே உள்ள கொந்தகை கிராமத்தில் கால்நடை மருத்துவமனைக்கு முன்பாக உள்ள கதிரேசன் - சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பழைமையான ஈமக்காட்டில் முதுமக்கள் தாழி, எலும்புகள் கிடைத்தன.
6-ம் கட்ட அகழாய்வுப் பணியின்போது 75 செ.மீ அளவுள்ள குழந்தையின் முழு எலும்புக் கூடு கிடைத்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஒரு குழந்தையின் எலும்பு ஒன்று 95 செ.மீ அளவில் கிடைத்தது பரபரப்பாக பேசப்பட்டது. கீழடியில் நடைபெற்று வரும் 7-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் முதுமக்கள் தாழியில் மனித எலும்பு கூடு கண்டறியப்பட்டது. 7-ம் கட்ட அகழாய்வில் இதுவரை முதுமக்கள் தாழியுடன் மனித எலும்பு கூடுகள், மண் பானை, வட்டில் மூடிகள் , சங்கு வளையல்கள், பருகு நீர் குவளை, அகண்ட வாய் கின்னம், பகடைக்காய், உழவுக்கு பயன்படுத்தும் கல்லால் ஆன கருவி, கருப்பு சிகப்பு நிறம் கொண்ட மண் குவளை, கருப்பு சிகப்பு நிறம் கொண்ட மண் ஓடு, வட்ட வடிவிலான சுடுமண்ணால் செய்யப்பட்ட வளையம், தங்க ஆபரண கம்பி, சூது பவள மணிகள் உள்ளிட்ட 900-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
தொன்மையான மனிதர்களின் இன மரபியலை அறியும் வகையில் கொந்தகையில் மேற்கோள்ளப்பட்டு வரும் அகழாய்வில் ஏற்கெனவே இரண்டு முதுமக்கள் தாழியுடன் கூடிய மனித எலும்பு கூடுகள் மற்றும் தரையில் புதைக்கப்பட்ட நிலையில் 7 மனித எலும்பு கூடுகள் கண்டறியப்பட்டுள்ள. கொந்தகையில் தொடர்ந்து மனித எலும்புக்கூடுடன் கூடிய முதுமக்கள் தாழிகள் கிடைத்து வருகின்றன. அதே போல் சமீபத்தில் முதுமக்கள் தாழி ஒன்றில் மர கைப்பிடியுடன் கூடிய வாள் ஒன்று கிடைத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளும் போது பழங்கால மக்கள் பயன்படுத்திய பெரிய அளவிலான பானை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பானை சிவப்பு நிறத்தில், அளவில் பெரியதாகவும், பானையின் கழுத்து பகுதியை சுற்றி நுணுக்கமான வேலைப்பாடுகளும் காணப்படுகிறது. இந்தப்பானை இதுவரை கிடைத்த பானைகளிலேயே பெரிய அளவிலானது எனக்கூறப்படுகிறது.
இது குறித்து தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு "குகைவிட்டுக் கிளம்பும் புலி, புகைவிட்டுக் கிளம்பும் எரிமலை, உறைவிட்டுக் கிளம்பும் வாள், தரைவிட்டுக் கிளம்பும் தமிழன் நாகரீகம், கீழடியில் தற்போது கண்டறியப்பட்டுள்ள சிவப்பு நிற பெரும் பானை" என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion