Omicron FAQs: 3வது அலையா? தடுப்பூசி யூஸ் ஆகுமா? ஒமிக்ரான் குறித்து அரசு சொன்ன முழு விளக்கம்!
தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலைத் ( ஆண்டிபாடி) தாண்டி அதிக ஆற்றல் பெற்ற வலிமையான செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தியும் (டி-செல்ஸ் அல்லது நினைவாற்றல் உயிரணுக்களே) பெறுகிறோம்
தற்போது மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில், ஒமிக்ரான் நோய்த்தொற்றைத் துரிதமாகக் கண்டறிய முடியுமா?
பாலிமரீஸ் செயின் ரியாக்ஷன் என்று அறியப்படும் RT-PCR சோதனைகள் அதிக உணர்திறன் மற்றும் பநம்பகத்தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது. ஸ்பைக், மெம்பரேன், என்வலப் ஆகிய புரதங்களில் உள்ள மூலக்கூறுகளைக் கொண்டு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. ஆனால், தற்போது ஒமிக்ரான் மரபணுவில் S gene மிகத்தீவிரமாக உருமாற்றம் அடைந்துள்ளது. எனவே, (S gene drop out) s - gene இன்மையை உறுதி செய்வதன் மூலமும், மற்ற புரந்தங்களில் உள்ள மூலக்கூறுகள் மூலமும் ஒமிக்ரான் தொற்றை அறியமுடியும். இருப்பினும், ஒமிக்ரான் தொற்றைக் உறுதிபடுத்த மரபணு வரிசை முறைகளை கையாள வேண்டியது அவசியமுள்ளது.
கொரோனா 3வது அலையை ஏற்படுத்துமா?
தென் ஆப்பிரிக்காவைக் கடந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. வைரஸின் தன்மையைக் கணக்கிடும் போது, இந்தியா உள்ளிட்ட மேலும் சில நாடுகளில் பரவக்கூடும். இருப்பினும், இந்த தொற்று அதிகரிப்புக்கு ஒமிக்ரான் வைரஸ் பிறழ்வின் எளிதில் பாதிப்புறும் தன்மை காரணமா? நோயின் தீவிரத்தன்மை என்ன? என்பது தற்போதைக்குத் தெளிவாகத் தெரியவில்லை.
தடுப்பூசி செலுத்தும் விகிதம் அதிகரித்து காணப்படுவதாலும், கோவிட் பரவல் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் தொடர்பாக நாடு முழுவதும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நடத்திய செரோ சர்வேயில் அதிகமானோர் டெல்டா மாறுபாடுகளில் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாலும் ஒமிக்ரான் பாதிப்பு அளவு குறைவாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.
தற்போதைய நிலைமை என்ன?
புதிய உருமாற்றம் பெற்ற ஓமைக்ரான் தொற்று ( பி.1.1529) கவலைக்குரியது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. கவலையளிக்கக் கூடிய வகை என்றால், பரவும் வேகம் தீவிரமாக இருக்கும் என்று பொருள். அதன் பரவும் தன்மை, தீவிரம் மற்றும் தடுப்பூசிகளிலிருந்து தப்பிக்கும் அம்சங்கள் பற்றி இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது
தடுப்பு நடவடிக்கைகள் என்ன ?
கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுவது, சமூக விலகல் முறையை கடைபிடிப்பது, உட்புற இடங்களில் போதுமான காற்றோட்ட வசதிகளை ஏற்படுத்துவது போன்ற ஏற்கனவே நடைமுறையில் உள்ள தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
தடுப்பூசிகளிலிருந்து தப்பிக்குமா ஒமிக்ரான்:
புதிய உருமாறிய ஒமிக்ரான் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படாது என்பதற்கு எந்த ஆதாராமும் இல்லை. இருந்தாலும், ஸ்பைக் புரதத்தில் ஏற்பட்டுள்ள மூலக்கூறுகள் மாற்றம் கொண்டுள்ளதால், தடுப்பூசியின் செயல்திறன் குறையக் கூடும். இருந்தாலும், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலைத் ( ஆண்டிபாடி) தாண்டி அதிக ஆற்றல் பெற்ற வலிமையான செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தியும் (டி-செல்ஸ் அல்லது நினைவாற்றல் உயிரணுக்களே) பெறுகிறோம். எனவே, எந்தவொரு தீவிர பாதிப்புக்கு எதிரான பாதுக்கப்பையும் தடுப்பூசி அளிக்கிறது.
மேலும், வாசிக்க: