மேலும் அறிய

ABP IMPACT | விழுப்புரத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு!

ஏபிபி நாடு செய்தி எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுத்து வருகின்றனர்.

ஏபிபி நாடு செய்தி எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுத்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 335 ஏக்கர் நடவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் வழியே ஓடும் ஓங்கூர்ஆறு, தென்பெண்ணை, சங்கராபரணி மற்றும் 506 ஏரிகள் மாவட்ட விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக உள்ளது.

எதிரொலி செய்தி:   மரக்காணம் பகுதியில் 5000 ஏக்கர் நெல் பயிர்கள் முற்றிலும் சேதம்: விவசாயிகள் கவலை!

இம்மாவட்டத்தின் மேற்கு மாவட்டங்களான திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெய்யும் மழை நீர் தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து உபரி நீர் ஏரிகளில் நிரம்பும். மாவட்டத்தின் இயல்பான மழையளவு 1060.30 மி.மீ., ஆகும். இதில், தென்மேற்கு பருவமழை 356.66 மி.மீ., மற்றும் வடகிழக்கு பருவமழை 638.11 மி.மீ., என ஆண்டின் சராசரி மழை அளவாக உள்ளது.

ABP IMPACT | விழுப்புரத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு!

கடந்த தென்மேற்கு பருவமழை மாவட்டத்தில் 446.14 மி.மீ., பெய்தது. இது சராசரி மழை அளவை விட 89.48 மி.மீ., கூடுதலாகும். இதனால், ஓரளவிற்கு ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியது.இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 26ம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழையானது, மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கும் மேல் தொடர்ந்து பெய்தது. இதனால், பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 506 ஏரிகளில், 296 ஏரிகள் முழு கொள்ளவு நிரம்பியது. மாவட்டத்தில் நீர்நிலைகளில் இருந்து வெளியேறிய மற்றும் தொடர் மழையால் தண்ணீர் விவசாய நிலங்களை சூழ்ந்தது.இதில், நெல், கரும்பு, உளுந்து பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களான மரவள்ளி, வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

ABP IMPACT | விழுப்புரத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு!

விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாவட்டத்தில் தொடர் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ள பயிர்கள் குறித்து வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். வெள்ள நீர் வடிந்த பிறகு, பயிர் சேதம் குறித்த முழு விபரத்தை அதிகாரிகள் சேகரித்து தயார் நிலையில் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவிக்கும் போது, உடனடியாக நிவாரணம் வழங்குவதற்காக இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏபிபிநாடுக்கு பேட்டி அளித்த மரக்காணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் கூறியதாவது :

குறிப்பாக மரக்காணம் வட்டாரத்தில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவில் சுமார் 1450 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெறப்பட்டுள்ளது. இது ஆண்டு சராசரி மழை அளவை விட 250 மில்லி மீட்டர் கூடுதலாகும். கூடுதலாக பெறப்பட்ட வடகிழக்கு பருவ மழையினால் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கீழ்பேட்டை, அனுமந்தை, கூனிமேடு,செட்டி குப்பம், செய்யான் குப்பம், கோணவாயன் குப்பம் மற்றும் கந்தாடு, ஊரணி பகுதிகளில் மழை நீரால் தேங்கியுள்ள வயல்களை வேளாண்மை மற்றும் உழவர்கள் நலத்துறையை சார்ந்த விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ரமணன் ,மரக்காணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன், துணை வேளாண்மை அலுவலர் கதிரேசன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் நரசிம்மன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மஞ்சு,பஞ்சநாதன், யமுனா,ஆஷா, விஜயலட்சுமி சுரேஷ் ஆகியோர் வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து வயல்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

ABP IMPACT | விழுப்புரத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு!

தற்போது அதிகப்படியான நீர் வடிய தொடங்கியுள்ளதால் அரசு விதி முறையின் படி 33 சதவீத இதற்குமேல் பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கெடுத்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். மேலும் பயிர் காப்பீடு திட்டம் குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலமாக துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும், களப்பணி செய்தித்தாள்கள் மூலமாகவும், எப்எம் ரேடியோ மூலமாகவும்  விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கடந்த நெல் சம்பா பருவத்தில் இந்த வட்டாரத்தைச் சார்ந்த காப்பீடு செய்த 7100 க்கும்  மேற்பட்ட  விவசாயிகளுக்கு சுமார் 485 லட்சம் பயிர் காப்பீட்டு தொகையாக விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் பெறப்பட்டவை, தொடர்ந்து விவசாயிகளும் ஆர்வமாக தங்களது பயிரினை இ சேவை மையங்கள் மூலமாக காப்பீடு செய்து வருகின்றனர். மாநில அரசும் காப்பீடு செய்யக்கூடிய காலக்கெடு வினை 30-11-2021 வரை நீடித்திட ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget