O. Panneerselvam: சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம் என்ற கருத்து தேசவிரோதமானது அல்ல - ஓபிஎஸ்
O. Panneerselvam: அதிமுக கட்சியின் தலைமைகளுக்கு இடையே ஏற்கனவே உட்கட்சி பூசல் இருந்து வரும் நிலையில், அதிமுகவில், சசிகலாவை இணைப்பது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

சசிகலாவை அதிமுக கட்சியில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு தனக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து ஓ. பன்னீர்செல்வம் மனம் திறந்து பேசியுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு சசிக்கலவை அதிமுகவுடன் இணைப்பதை எதிர்த்து நீங்கள்,இன்று அதற்கு முரணாக இருக்கிறீர்களே என்ற கேட்ட கேள்விக்கு,
பன்னீர்செல்வம், “ அப்போது ஆட்சி கவிழும் நிலை இருந்தது, அவர் யாரோ இருந்தார் (சசிகலா) என்பதன் அடிப்படையிலேயே அவர் (எடப்பாடி பழனிச்சாமி) மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு எதிராக வாக்களித்தேன்.” என்றார்.
சசிகலா அதிமுகவில் இணைப்பது பற்றி:
நான் எப்போதும் சசிகலா கட்சியில் இணைப்பது பற்றி ஏதும் பேசியதில்லை. இந்த சமாச்சாரத்தில் கட்சியின் தலைமைக் கழகம் மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பதாகதான் நான் கூறியிருகிறேன்.
சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து நான் சொன்ன கருத்து ஒன்றும் தேசத்துரோகமானது இல்லை.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி பொறுப்பேற்றது பற்றி...
எடப்பாடி பழனிச்சாமி யாரால் முதலமைச்சர் ஆனார் என்பது உலகிற்கே தெரியும். அதை உலகம் சொல்லும். இது மறுக்க முடியாத உண்மை. எப்போதும் மாறாது.





















