மேலும் அறிய

கால் பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணத்திற்கு இதுதான் முக்கிய காரணம் – கடுமையாக கண்டிக்கும் சீமான்

கால் பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணத்திற்கு அரசு மருத்துவமனைகளின் அலட்சியமும், தரமற்ற தன்மையுமே முக்கிய காரணமாகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

கால் பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணத்திற்கு அரசு மருத்துவமனைகளின் அலட்சியமும், தரமற்ற தன்மையுமே முக்கிய காரணமாகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

“சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால் பந்தாட்ட வீராங்கனை அன்பு மகள் பிரியா, அரசு பொது மருத்துவமனையில் செய்யப்பட்ட தவறான அறுவை சிகிச்சை காரணமாக உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். சிகிச்சையின்போது அரசு மருத்துவமனைகளில் நிகழும் அலட்சியத்தால் விலைமதிப்பற்ற ஓர் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும். அரசு மருத்துவர்களின் அலட்சியமும், அரசு மருத்துவமனைகளின் தரமற்ற தன்மையும், தமிழ்நாடு அரசின் நிர்வாகத் திறமையின்மையுமே மகள் பிரியா உயிரிழந்ததற்கு முக்கியக் காரணமாகும்.

ஐம்பதாண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் இலாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்காலச் சூழலில், நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும், அவர்தம் குடும்பத்தினரும் தனியார் பெருமருத்துவமனைகளில் உயர்தரமான மருத்துவம் பெறுகின்றனர். ஆனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வேறுவழியின்றி அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையே உள்ளது. இதிலிருந்தே அரசு மருத்துவமனைகளின் தரம் எந்த அளவில் உள்ளது என்பது நன்கு விளங்கும்.

கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் அர்ப்பணிப்புணர்வோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது மிக இன்றியமையாததாகும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமாகும்.

தமிழ்நாடு அரசும், அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்யத் தொடர்ச்சியாகத் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும். அதனை முறையாகச் செய்யத் தவறுவதாலேயே தற்போது அநியாயமாக ஓர் உயிர் பறிபோயுள்ளது. மகள் பிரியா தலைநகர் சென்னையைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை என்பதால் செய்தி ஊடகங்களின் மூலம் அவரது மரணமும், அரசு மருத்துவமனைகளின் அவலமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் நிகழும் குரலற்ற கிராமப்புற ஏழை மக்களின் மரண ஓலங்கள் அரசின் செவிகளை வந்தடையாமலே அடக்கி ஒடுக்கப்படுகின்றன என்பதே எதார்த்த உண்மையாகும்.

எனவே, தமிழ்நாடு அரசு இனியும் மகள் பிரியாவிற்கு நேர்ந்தது போன்று, அரசு மருத்துவமனைகளில் அலட்சியம் மற்றும் தவறான மருத்துவத்தினால் யாதொரு உயிரும் பறிபோகாதவாறு காக்க உரிய அறிவுறுத்தலையும், வழிகாட்டலையும் வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், தவறான அறுவை சிகிச்சையால் மகள் பிரியா உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உயிரிழந்த மகள் பிரியாவின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாயை துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டுமெனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேபோல், கால்பந்து வீராங்கனை ப்ரியாவின் மரணம் குறித்து பா.ஜ.க மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் பேட்டி அளிக்கையில், 

“மிகப்பெரிய துயரம் நடந்திருக்கிறது. தமிழகத்திலுள்ள எந்த குடும்பத்திலும் நடைபெறக்கூடாது என்று எண்ணும் சம்பவம் இங்கு நடந்துள்ளது. இன்றைய மருத்துவ வளர்ச்சியில் மூட்டு ஜவ்வு அறுவை சிகிச்சை மிக சாதாரணமான ஒன்றாகும். ஆனால் முதல்வரின் தொகுதியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் மூட்டு ஜவ்வு அறுவை சிகிச்சை தோல்வியுற்று ஒரு உயிர் போயுள்ளது.

மாணவி பிரியா சாதாரண பெண் அல்ல, ஒரு கால்பந்தாட்ட வீராங்கனை என்ற முறையில் எத்தை போட்டியில் அவர் கலந்திருப்பார் எத்தனை பதக்கங்களை, கோப்பைகளை வென்றிருப்பார்? வீட்டுக்கும், நாட்டிற்கும் எத்தனை பெருமை தேடித் தந்திருப்பார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உயிரிழந்த பிரியா குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மாணவி பிரியாவின் மரணத்தை அரசியலாக்காதீர்கள் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது. மாணவி பிரியாவின் உயிரிழப்புக்கு உரிய பதில் வேண்டும், இரு மருத்துவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து கடந்து செல்லக்கூடாது. மாணவி பிரியாவிற்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? எந்த மாதிரியான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது என்பதை தனிக் குழு அமைத்து விசாரணை நடத்தி இனி இப்படி ஒரு சம்பவம் அரங்கேறாமல் தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் விளையாட்டுத்துறையை அலங்கரிக்க வேண்டிய பெண் இன்று உயிரிழந்துள்ளதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

பால் விலை உயர்வுக்காக ஈரோட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்றுவிட்டதால் அவரால் இன்று இங்கு வர இயலவில்லை. ஆனால் ஒன்றிரண்டு நாட்களில் அண்ணாமலை அவர்கள் மாணவி பிரியா குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்க வருவார்” எனக் கூறியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
Jasprit Bumrah: சவால் விட்ட ஆஸி., கோன்ஸ்டாஸ், ஸ்டம்புகளை சிதறடித்த ஜஸ்பிரித் பும்ரா - வீடியோ வைரல்
Jasprit Bumrah: சவால் விட்ட ஆஸி., கோன்ஸ்டாஸ், ஸ்டம்புகளை சிதறடித்த ஜஸ்பிரித் பும்ரா - வீடியோ வைரல்
மத்திய அரசின் ரூ. 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! பெறுவது எப்படி?
மத்திய அரசின் ரூ. 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! பெறுவது எப்படி?
Dhanush: தனுஷ் எடுத்த முடிவு; மறுப்பு சொல்லாத ஐஸ்வர்யா! பச்சை கொடி காட்டிய தலைவர் - வெளியாக போகும் சூப்பர் தகவல்!
Dhanush: தனுஷ் எடுத்த முடிவு; மறுப்பு சொல்லாத ஐஸ்வர்யா! பச்சை கொடி காட்டிய தலைவர் - வெளியாக போகும் சூப்பர் தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
Jasprit Bumrah: சவால் விட்ட ஆஸி., கோன்ஸ்டாஸ், ஸ்டம்புகளை சிதறடித்த ஜஸ்பிரித் பும்ரா - வீடியோ வைரல்
Jasprit Bumrah: சவால் விட்ட ஆஸி., கோன்ஸ்டாஸ், ஸ்டம்புகளை சிதறடித்த ஜஸ்பிரித் பும்ரா - வீடியோ வைரல்
மத்திய அரசின் ரூ. 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! பெறுவது எப்படி?
மத்திய அரசின் ரூ. 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! பெறுவது எப்படி?
Dhanush: தனுஷ் எடுத்த முடிவு; மறுப்பு சொல்லாத ஐஸ்வர்யா! பச்சை கொடி காட்டிய தலைவர் - வெளியாக போகும் சூப்பர் தகவல்!
Dhanush: தனுஷ் எடுத்த முடிவு; மறுப்பு சொல்லாத ஐஸ்வர்யா! பச்சை கொடி காட்டிய தலைவர் - வெளியாக போகும் சூப்பர் தகவல்!
Rasipalan December 29:  துலாமிற்கு நண்பர்கள் ஆதரவு: விருச்சிகத்திற்கு பெருமை- உங்க ராசி பலன்?
Rasipalan December 29: துலாமிற்கு நண்பர்கள் ஆதரவு: விருச்சிகத்திற்கு பெருமை- உங்க ராசி பலன்?
இந்த வாரம் ஒன்னு இல்ல இரண்டு விக்கெட்டை வீட்டுக்கு அனுப்பிய பிக்பாஸ்! வெளியேறியது யார் யார் தெரியுமா?
இந்த வாரம் ஒன்னு இல்ல இரண்டு விக்கெட்டை வீட்டுக்கு அனுப்பிய பிக்பாஸ்! வெளியேறியது யார் யார் தெரியுமா?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
Embed widget