Vck Vanni Arasu On Governor | "ஆளுநர் ரவி அவர்களின் ஏமாற்றுவேலை! இதோ ஆதாரம்!" - வன்னி அரசு
தமிழ்த்தேசிய இனத்தின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவியை திருப்பி அனுப்ப தமிழ்நாடு அரசு நாளை நடக்கவிருக்கும் அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும்.
நாளை நடக்கவிருக்கும் அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் ஆளுநரை திரும்ப பெற தீர்மானம் இயற்றவேண்டும் என்று விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,
"நாகர்கள் இந்தியர்கள் அல்ல, நாகாலாந்து இந்தியா அல்ல. தனித்த மொழி, பண்பாடு, வரலாறு கொண்ட தேசிய இனம் நாகர்கள். ஒருபோதும் அந்நிய ஆதிக்கத்தை ஏற்க மாட்டோம்' என்ற நிலைப்பாடு கொண்ட அமைப்பு 'நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில்'
நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் (NSCN) அமைப்புடன் தான் ஆர்.என்.ரவி ஒப்பந்தத்தை பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்திடுகிறார்.
2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் இந்திய அரசியலமைப்பு சட்ட வரையறைக்குள் வராது. இது இறையாண்மை உள்ள தனித்த இரு அமைப்புகளால் போடப்பட்ட ஒப்பந்தம்.
பகிர்ந்தளிக்கக்கூடிய இறையாண்மை கொண்டதாக இந்தியாவுடன் இருப்போம் (with India) என்ற ஒப்பந்தத்தின் சாரத்தை சிறப்பு அந்தஸ்தோடு இந்தியாவுக்குள் இருப்போம் (within India) என்று பொருள்படும்படி இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு & மற்ற நாகா போராளி குழுக்களிடம் பகிர்ந்துள்ளார் ரவி என்று குற்றம் சாட்டுகிறது NSCN.
உள்துறை தொடர்பான மாநிலங்களவை நிலைக்குழு அறிக்கை 213ல் ரவி சொல்லியுள்ளதை ஆதாரமாக காட்டுகிறது NSCN.
உண்மைக்கு புறம்பாக இந்திய பாராளுமன்றத்துக்கும், நாகர்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலிகடாவாக்க, பொய் சொல்லியுள்ள ரவியை பேச்சுவார்த்தை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று NSCN அமைப்பு வலியுறுத்தியது. அதன் பின் நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநரானார். ஆனாலும் நாகர் எனும் தேசிய இனத்துக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டதால் போராளிக்குழுக்கள் ரவி அவர்களை வெளியேற்ற வேண்டும் என நிபந்தனை விதித்தது. அந்த நெருக்கடியால் தான் ரவி தமிழ்நாட்டு ஆளநரானார்.
இங்கும் தமிழருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். தமிழ்த்தேசிய இனத்தின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவியை திருப்பி அனுப்ப தமிழ்நாடு அரசு நாளை நடக்கவிருக்கும் அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்
ஆளுநர் ரவி அவர்களின் ஏமாற்றுவேலை!
— வன்னி அரசு (@VanniArasu_VCK) February 4, 2022
இதோ ஆதாரம்!
—————
நாளை நடக்கவிருக்கும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஆளுநரை திரும்பபெற தீர்மானம் இயற்றவேண்டும்!
……………………………
நாகர்கள் இந்தியர்கள் அல்ல, நாகாலாந்து இந்தியா அல்ல.
தனித்தமொழி,பண்பாடு,
வரலாறு கொண்ட தேசிய இனம் நாகர்கள். pic.twitter.com/KQG1aOXOtJ
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்