NEET Exam: இந்தியா முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு நிறைவு; தேர்வு எப்படி இருந்தது?
NEET Exam: நாடு முழுவதும் நடைபெற்ற இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிந்துள்ளது.
நாடு முழுவதும் இன்று நடைபெற்ற 2024ஆம் ஆண்டிற்கான இளங்கலை நீட் தேர்வானது, நிறைவடைந்தது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெற்ற நிலையில், இத்தேர்வானது நிறைவடைந்தது. இதன் முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு:
2024ஆம் ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வானது, நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. இளங்கலை நீட் தேர்வுக்கு சுமார் 23.8 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இத்தேர்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 557 நகரங்கள் மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த 14 நகரங்களிலும் தேர்வு நடைபெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டானது, கடந்த 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வானது இன்று தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.
தேர்வு எப்படி இருந்தது?
தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவிக்கையில், உயிரியல் பிரிவு மிக எளிதாக இருந்ததாகவும் இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவில் சில கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
சிலர் மாணவர்கள் தெரிவிக்கையில், இயற்பியல் பிரிவு கடினமாக இருந்ததாகவும், வேதியியல் பிரிவில் கணக்குகளை தீர்வு காணும் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், உயிரியல் பிரிவு எளிதாக இருந்ததாகவும் தெரிவிக்கின்றன.
பல மாணவர்கள் தெரிவித்ததை வைத்து பார்க்கையில், உயிரியல் பிரிவு எளிதாக இருந்ததாக தெரிவித்ததை பார்க்க முடிந்தது.
மருத்துவ படிப்புகள்:
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்ஸி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.
தேர்வுக்கு வரும் மாணவ மாணவிகள், அரசு வழங்கிய ஒரு அடையாள அட்டை, ஹால் டிக்கெட், 2 புகைப்படம் மட்டுமே கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். 24 தேர்வு மையங்களில் தலா ஒரு தலைமை ஆசிரியர் தலைமையில், அறை கண்காணிப்பாளர்கள் 2 ஆசிரியர்கள் பணியில் இருந்தனர் என தகவல் தெரிவிக்கின்றன.
இளங்கலை நீட் தேர்வுக்கு சுமார் 23.8 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில், எத்தனை பேர் எழுதினர் என்பது குறித்தான தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.