மேலும் அறிய

கோடிக்கணக்கில் ஊழல்; சிபிஐ விசாரணை வேண்டும் - முன்னாள் முதல்வர் வலியுறுத்தல்

புதுச்சேரியில் நடந்துவரும் ஊழல் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுத இருக்கிறேன்.

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்துவரும் ஊழல் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுத உள்ளேன் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

செய்தியளர் சந்திப்பில் அவர் கூறுகையில், "புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை ஊழலை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. ரெஸ்டோ பார் திறப்பு, லேப் டாப், மாட்டு தீவனம் வாங்கியது, சிவப்பு ரேஷன்அட்டை கொடுப்பது என அனைத்திலும் ஊழல், பொதுப்பணித்துறையில் ஒவ்வொரு டெண்டருக்கும் 30 சதவீத கமிஷன் என விஞ்ஞான ரீதியில்ஊழல் நடைபெற்றுள்ளது. நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக கூறிவரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் பதில் அளிப்பதில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணி ரூ.29 கோடிக்கு டெண்டர் எடுக்கப்பட்ட நிலையில், அதில் 46 பேருந்துகள் நிற்கும் இடம், 31 கடைகள், புக்கிங் சென்டர், கழிவறைகள் என சுமார் ரூ.15 கோடிக்குமட்டுமே பணி நடைபெற்றுள்ளது. இதில் ரூ.14 கோடிக்கு மேல் இமாலய ஊழல் நடைபெற்றுள்ளது.

அதே போல் குமரகுருபள்ளத்தில் ரூ.45.5 கோடியில் 220 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி புதிய தொழில் நுட்பத்தில் நடந்து வருகிறது. புதிய தொழில்நுட்பத்தில் கட்டும் பணியில் செலவு தொகை குறையும். அதன் செலவு ரூ.30 கோடிக்கு மேல் போகாது. ஆனால் 45.5 கோடியில் கட்டப்படுகிறது. இதில் ரூ.15 கோடி அளவுக்கு மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. மேலும் முதல்வர்ரங்கசாமி ரூ.50 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்தை தொடங்கி வைத்தார். இதிலும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.  முதலமைச்சர் ரங்கசாமியும், அமைச்சர் லட்சுமி நாராயணனும் சைலெண்டாக லஞ்சம் வாங்குகின்றனர். மக்களை ஏமாற்றுகின்றனர்.

இந்த ஊழல்களை நிரூபித்தால் முதல்வர் ரங்கசாமி மற்றும்பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லதயாரா?. இந்த ஊழிலில் ஆட்சியாளர்கள் முதல்அதிகாரிகள் வரை கூட்டுக்கொள்ளையில் ஈடுபடுகின்றனர். ஆகவே ஊழல் முறைகேடுகள்குறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர்நிர்மலா சீத்தாராமன் ஆகியோருக்கு கடிதம் எழுத உள்ளேன் என்றார்மேலும், பிரதமர் நரேந்திரமோடி தொடர்ந்து ஊழலற்ற ஆட்சி கொடுப்போம். புதுச்சேரியில் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார். ஆனால் தற்போது புதுச்சேரியில் ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெறுகிறது.

புதுச்சேரி மின்துறையை தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்றுசொல்லும்போது அதனை நான் தடுத்து நிறுத்தினேன். ஆனால் மின்துறையை தனியாரிடம் தாரைவார்க்க, குறிப்பாக அதானியிடம் கொடுக்க இந்த ஆட்சியாளர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். மின்துறை தனியார் மயமாக்க விடமாட்டோம். மின்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்கட்டணம் உயர்த்துவதை குறைக்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்.புதுச்சேரியில் சென்டாக் மருத்துவ கலந்தாய்வில் என்ஆர்ஐ இட ஒதுக்கீட்டில் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது. இதில் போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்த 48 பேரை ரத்து செய்துள்ளனர். அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. போலி சான்று தயாரித்தவர்கள் குறித்து விசாரணையும் நடத்தப்படவில்லை. இதில் மருத்துவக் கல்லூரிகளும் உடந்தையாக இருக்கின்றன. முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு போலி பத்திரம் மற்றும் சான்றிதழ்கள் தயாரிப்பதை ஊக்குவிக்கிறது.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் புதுச்சேரியில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஜான்குமார் எம்எல்ஏ பகிரங்கமாக ஜோஸ் சார்லஸ் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடுவார். நான் முதலியார்பேட்டை தொகுதியிலும், என் மகன் நெல்லித்தோப்பிலும் போட்டியிடுவோம் என்று பேசியுள்ளார். அவர் பாஜகவில் இருக்கிறாரா? இல்லையா? இன்றைக்கு பாஜக, பாஜக ஆதரவு எம்எல்ஏக்களின் நிலை என்ன? அந்த கட்சியில் நீடிக்கின்றனரா, ஆதரவு கொடுக்கின்றனரா என்பதுதெரியவில்லை. எனவே இதில் பாஜகவுக்கு தொடர்பு உள்ளதா? என பாஜக தலைமை தெளிவுப்படுத்த வேண்டும். புதுச்சேரியில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சி பாஜக. பண பலத்தை நம்பி வரும் பாஜகவினரை புதுச்சேரி மக்கள் தோற்கடிப்பார்கள் பாடம் புகட்டுவார்கள்" என நாராயணசாமி தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 LSG vs PBKS: பட்டையை கிளப்புமா பஞ்சாப்? ரன் வேட்டை நடத்துவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 LSG vs PBKS: பட்டையை கிளப்புமா பஞ்சாப்? ரன் வேட்டை நடத்துவார்களா பண்ட் பாய்ஸ்?
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Cadre Fight | மிரட்டல்..கல்வீச்சு..அடிதடி..அத்துமீறிய விசிக பெண் நிர்வாகி பரபரப்பு காட்சிகள்EPS And OPS Meets Modi: தமிழ்நாடு வரும் மோடி! EPS, OPS போடும் ப்ளான்! பாஜக கூட்டணியில் மாற்றம்?Annamalai BJP : அண்ணாமலை பதவி நீக்கம்? சீனுக்கு வந்த நயினார்! ஆட்டம் காட்டும் அமித்ஷாIrfan Controversy | ”அசிங்கமா இல்லையா..” இழிவுபடுத்திய இர்பான்! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 LSG vs PBKS: பட்டையை கிளப்புமா பஞ்சாப்? ரன் வேட்டை நடத்துவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 LSG vs PBKS: பட்டையை கிளப்புமா பஞ்சாப்? ரன் வேட்டை நடத்துவார்களா பண்ட் பாய்ஸ்?
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Dhoni Retirement: ஓய்வு பெறுகிறாரா தோனி? பாதியிலே ஐபிஎல்-க்கு பை பை சொல்கிறாரா?
Dhoni Retirement: ஓய்வு பெறுகிறாரா தோனி? பாதியிலே ஐபிஎல்-க்கு பை பை சொல்கிறாரா?
திருச்சிக்கு வரும் Dolby Cinema.. சென்னைக்கு டப் கொடுக்கும் போலயே.. இவ்வளவு வசதிகளா ?
திருச்சிக்கு வரும் Dolby Cinema.. சென்னைக்கு டப் கொடுக்கும் போலயே.. இவ்வளவு வசதிகளா ?
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
Siragadikka Aasai: சிறடிக்க ஆசை ஹீரோயின் முதன்முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Siragadikka Aasai: சிறடிக்க ஆசை ஹீரோயின் முதன்முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Embed widget