(Source: ECI/ABP News/ABP Majha)
Namakkal: பரோட்டா சாப்பிட்ட 38 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு - நாமக்கல்லில் ஓட்டலுக்கு சீல்
பரோட்டா கடையில் உள்ள பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள பிரபல பரோட்டா கடையில் நேற்று (03.07.2023) காலை அப்பகுதி மக்கள் உணவு அருந்த சென்றுள்ளனர். இதேபோல் ஒருசிலர் வீடுகளுக்கு பார்சல் வாங்கி சென்று சாப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், பரோட்டா சாப்பிட்ட பலருக்கு திடீர் உடல்நலக்குறை ஏற்பட்டது. பரோட்டா சாப்பிட்ட 38 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்ட நிலையில், அவர்கள் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தகவல் அப்பகுதி முழுவதும் வேகமாக பரவிய நிலையில், இதுகுறித்து அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரோட்டா கடைக்கு சென்று அங்கு பயன்படுத்திய மாவு, எண்ணெய், சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். பரோட்டா கடையில் உள்ள பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பரோட்டா சாப்பிட்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சுகாராரத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். பரோட்டா சாப்பிட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பரோட்டா சாப்பிட்டு 38 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்