"17 பேர் லிஸ்ட் கையில் இருக்கு... டெல்லி பாணியில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்!" - நயினார் நாகேந்திரன் அதிரடி
தமிழகத்தில் 2026 நடைபெறும் தேர்தலில் எத்தனை கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்திருந்தாலும் ஐந்தாயிரம் கொடுத்தாலும் மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள்!

விழுப்புரம் : எத்தனை ஷா வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிய திமுகவில் 17 பேரின் லிஸ்ட் கையில் இருப்பதால் யார் யார் உள்ள போறாங்க யார் யார் வெளியே இருக்க போறாங்க என்று தெரியும் டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது போல் தமிழகத்தில் ஏற்படும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
17 பேரின் லிஸ்ட் கையில இருக்கு
தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரையை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் யாத்திரையை நயினார் நாகேந்திரன் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பேசிய அவர் பள்ளிகள் கல்லுரிகள் அருகிலையே கஞ்சா போதை பொருட்கள் விற்பனை செய்யபடுவதாகவும், பள்ளிகளில் துப்புரவு பணிகள் மேற்கொள்ள ஆட்களை நியமனம் செய்யாமல் பள்ளி மாணவர்களையே திராவிட மாடல் ஆட்சியில் பயன்படுத்துவதாக குற்றச்சாடினார். துப்புரவு பணியாளர்களை நிரந்தரம் செய்வோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவிக்கிறார். ஆனால் அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் சிறையில் அடைக்கிறார்கள், செவிலியர்கள் தலைமை செயலகத்தில் போராட்டம் செய்யும் நிலை தான் உள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றம் செய்ய விடாமல் செய்கிறார்கள். தமிழகத்தில் 2026 நடைபெறும் தேர்தலில் எத்தனை கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்திருந்தாலும் ஐந்தாயிரம் கொடுத்தாலும் மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள் மக்கள் விரோத குடும்ப ஆட்சி அகற்ற வேண்டுமென உருவாக்கப்பட்ட கூட்டணி தான் தேசிய ஜனநாய கூட்டணி என கூறினார்.
உலக நாடுகளில் விமானத்தில் செல்லும் போது விமான நிலையங்களில் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும் தலைவராக மோடி உள்ளதாகவும், நீதிபதியை நீக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் கையெழுத்து இட்டுள்ளார்கள் எம்பிக்கள் மோடி அமித்ஷா இருக்கும் வரை நீக்க முடியாது நீதிபதியை நீக்கும் அதிகாரம் எம்பிக்களுக்கு யார் கொடுத்தது கேள்வி எழுப்பினார். நீதிபதி தீர்ப்பினை அவமதிக்கும் தலைவராக ஸ்டாலின் உள்ளதாகவும் நீதிபதி தீர்ப்பினை மதிக்கும் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளதாகவும்,தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை கள்ளசாராயம் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
பாலியல் குற்றத்திற்கு தனி நீதிமன்றம் அமைப்போம் என்றார்கள் திமுக வந்த பிறகு தான் அதிக பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. ஆட்சிக்கு எதிராக நடந்தால் இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்றார்கள் ஆனால் யாரை அடக்க போகிறார்கள் என தெரியவில்லை என தெரிவித்தார். தவெக தலைவர் கரூரில் பேசும் போது பாட்டிலுக்கு 10 ரூபாய் பாட்டில் என பாட்டு போட்டபோது லைட் அணைக்கப்பட்டு போலீசார் தடியடி நடத்தியதால் சிறுமிகள் பெண்கள் என 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பு காரணம் திமுக ஆட்சி தான் தமிழகத்தில் சர்வதிகார ஆட்சி நடைபெற்று கொண்டிருப்பதாக கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமியும் தானும் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளதால் இந்த பயணம் முடியும் போது திமுக ஆட்சி இருக்காது என்றும் எத்தனை ஷா வந்தாலும் எங்களை ஒன்னும் செய்ய முடியாது என்று கூறிய திமுகவினர் கொஞ்சம் பொறுத்து இருங்க 17 பேர் மேல் எல்லா விஷயமும் வச்சிருக்கோம் 17 பேர் மேல் எங்ககிட்ட லிஸ்ட் கையில் இருக்கு யார் யார் உள்ள போறாங்க யார் யார் வெளியே இருக்க போறாங்க லிஸ்ட் எல்லாம் இருக்கு டெல்லியில் ஆட்சி மாற்றம் எப்படி வந்தது அரவிந்த் கெஜ்ரால் எங்க போனாரு அதே மாதிரி நிலைமை தமிழகத்தில் ஏற்படும் என தெரிவித்தார்.
வாக்கு திருட்டு என்றார்கள் பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. தமிழகத்தில் 75 லட்சம் இறந்த திமுக வாக்காளர்கள் உள்ளனர். இறந்து போனவங்க இன்று உயிரோடு இருக்காங்க திமுக காரர்கள் எல்லாம் ஓட்டு போட்டுட்டே இருக்காங்க ஆனா அந்த ஓட்டு 75 லட்சம் ஓட்டு அகற்றப்படும், சில பேர் வண்டில ஆடிட்டு வர்றாங்க பாட்டு பாடிட்டு வராங்க ஆனா நம்ம பெரிய பிக்பாஸ் என்று அவங்களுக்கு தெரியாது என மறைமுகமாக தவெக தலைவர் விஜயை சாடினார்.





















