மேலும் அறிய

“அடிமைப்படுத்துதலை எதிர்த்து குரல் கொடுத்தவர் கொள்கைகளை ஏற்போம்” - பெரியாருக்கு சீமான் மரியாதை!

பெரியாரின் நினைவு தினத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.

பெரியாரின் நினைவு தினத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எங்களுக்கு ஒரு கொள்கை இருக்கிறது. ஆனால் அடிமைப்படுத்துவதை எதிர்த்து குரல் கொடுத்தவர்களின் கொள்கைகளை ஏற்போம். ஆனால், பிரபாகரன் தான் எங்கள் தலைவர் ஆவார்” என்றார். 

செய்தியாளார் சந்திப்பில் சீமான் பேசியதன் விவரம்:

மூட பழக்கங்களில் மூழ்கி, சாதி மத சாக்கடைக்குள் சிக்கி மீள எழ முடியாத இழி நிலையில் இருந்த எம் மக்களை அறியாமை இருள் நீக்கி, அறிவு ஒளி பாய்ச்சி இந்த சமூக மேம்பாட்டிற்காக அரும் பங்காற்றிய பெரியார் அவர்களுக்கு 

பெண் அடிமைத்தனம் என்ற பெருங்கொடுமை இன்று வரை புரையோடி இருக்கிறது. அதற்கான சிந்தனை வித்திட்டு, பெரும்பாடாற்றினார் பெரியார். அவர்கள் போராடினார்கள்.அதற்கு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சட்ட வரைவினை கொடுத்து செயல்வடிவம் கொடுத்தார். இவையெல்லாம் வரலாற்று உண்மைகள்.

இன்று வரை இரட்டைக் குவளை முறை இருக்கிறது. மனித குலத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாமல் சமநிலை வர வேண்டும் என்று ஏராளமான முன்னோர்கள் போராடினார்கள். அந்தவகையில் முதன்மையான தளபதியாக போராடிய புரட்சியாளர் ஈ. வே. ரா. பெரியார். பெரியாருக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறோம். 

நாம் தமிழர் கட்சி பெரியாரை எதிர்ப்பதாக கருத்துக்கள் இருக்கிறதே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சீமான்,” திராவிட இயக்கங்கள் காலங்காலமாக பொய், புனைவு பேசுவது; பொய்யை உண்மையாக்க பாடுபடுவது ஆகியவற்றைதான் செய்து வருகிறார்கள். ஆரியர்கள் ஒருவகையில் எங்கள் வரலாற்றை திரித்தார்கள். சிவனை ருத்ரன் ஆக்கினார்கள். கொற்றவையை பார்வதியாக்கினார்கள். எங்களுடைய முருகனை சுப்ரமணிய சாமி ஆக்கினார்கள். ‘சு’ - வை நீக்கிவிட்டால் ப்ரணாமனிய சாமி யாக இருக்கும்.  மாயோனை கிருஷ்ண பரமாதமாக ஆக்கினார்கள். கடைசியில் வள்ளுவனை காவியைக் கட்டி எங்கள் ஆள் என்றார்கள். அம்பேத்கர் மீது காவி சாயம் பூசினார்கள். எப்போதும் திராவிடர்கள் பொய்யை பேசுவார்கள்.

என் அரசியலை நேரே நின்று தர்க்கம் செய்து வெல்ல முடியவில்லை. அவதூறு பரப்பப்படுகிறது. அதுபோலதான் இது. எங்களுக்கு ஒரு கோட்பாடு இருக்கிறது. அதை பல முறை சொல்லியிருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். 

“ நாங்கள் உலகெங்கிலும் எங்கெல்லாம் மானுட சமூகம் தாழ்ந்து வீழ்ந்துள்ளதோ, அடிமையாகி உள்ளதோ, அவர்களின், மானுட சமூகத்தின் மேம்பாட்டிற்கு போராடியவன் பாடுபட்டவன், புரட்சி செய்தவர்கள், உயிர் கொடுத்தவர்களை எங்கள் முன்னத்தியோராக கருதுகிறோம்.

நாங்கள் அடிமைப்படுத்தப்பட்ட தேசிய இனத்தின் மக்கள். நாங்கள் மார்க்ஸ்-ஐ ஏற்போம்; அறிவு ஆசானாக, வழிகாட்டியாக! அனால், இந்த நிலத்தினுடைய தாத்தா சிங்கார வேலர், ஜீவானநந்தம், நல்லக்கண்ணு ஆகியோரைதான் தலைவராக ஏற்போம்.

புரட்சியாளார் அம்பேதக்ரை பெருமைக்குரிய வழிக்காட்டியாகம் அறிவு ஆசானாக ஏற்போம்.ஆனால், அதைபோலவே, இந்த நிலத்தில் எங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசன், பாட்டனார் அயோத்திதாச பண்டிதரையும் தான் தலைவராக ஏற்போம். 

பெரியாரை அறிவு ஆசானாக, வழிக்காட்டியாக ஏற்கிறோம். ஆனால், தலைவனாக பிரபாகரை மட்டுமெ ஏற்போம். எங்களுக்கு ஒரு கோட்பாடு இருக்கிறது. தகப்பன் என்பவன் எங்களை பெத்தவனாக இருக்க வேண்டும். தலைவன் என்பவன் என் இரத்தவனாக இருக்க வேண்டும். என் மொழி புரியாதவன் எனக்கு இறைவனாக இருக்க முடியாது. என் வலி உணராதவன் எங்களுக்கு தலைவனாக இருக்க முடியாது. என் இன வரலாறு தெரியாதவன் எனக்கு வழிக்காட்டியாக இருக்க முடியாது. என்று தெரிவித்தார்.

பெரியாரைப் பற்றி பேசுவார்கள் இவர்கள், பெரியார் பேசியதை பேசுவார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
Embed widget