மேலும் அறிய

நாகை அருகே பர்மா மீனவர்கள் 4 பேர் கைது - மொழி தெரியாததால் சைகையில் விவரம் கூறும் மீனவர்கள்

புயல் சின்னத்தால் கடலில் ஏற்பட்ட  காற்றின் வேகம் காரணமாக மீனவர்கள் தத்தளித்தபடி இந்திய கடல் எல்லை பரப்பிற்குள் வந்தார்களா அல்லது எல்லை தாண்டி மீன் பிடிப்பதற்காக வந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை.

இந்திய கடல்  எல்லைக்குள்  மீன்பிடித்த பர்மா மீனவர்கள் 4 பேர் பாய்மரப்படகுடன்  கைது செய்யப்பட்டனர். அவர்களை இந்திய கடற்படையினர் நாகை கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின்னர் சென்னை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
 
கடந்த 18 தினங்களுக்கு முன்பு பர்மாவில் இருந்து நான்கு மீனவர்கள் பாய்மரப் படகுடன் மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் நாகப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில், நேற்று மதியம் அவர்கள்  மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது அங்கு ரோந்து பணியில் இருந்து இந்திய கடற்படையினர், இந்திய கடல் எல்லை பரப்பிற்குள்  பாய்மரப்படகு ஒன்று நிற்பதை கண்டு சந்தேகித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பர்மா மீனவர்கள் 4 பேரை  கைது செய்த இந்திய கடற்படையினர் இன்று நாகைக்கு அழைத்து வந்தனர்.

நாகை அருகே பர்மா மீனவர்கள் 4 பேர் கைது - மொழி தெரியாததால் சைகையில் விவரம் கூறும் மீனவர்கள்
 
மியான்மர் (பர்மா) மீனவர்களை கைது செய்து C-436 சார்லி கப்பல் மூலம் அழைத்து வந்த கடலோர காவல்  படை துணை தளபதி கணேஷ் கடலோர காவல் படை காரைக்கால் நிலையத் தளபதி சவுமே சண்டோலா முன்னிலையில் நாகை மாவட்ட கடலோர கடலோர குழும ஆய்வாளர் ரமேஷ் குமாரிடம் ஒப்படைத்தார். நாகையிலிருந்து சுமார் ஒரு கடல் மைல் தூரத்தில் அவர்கள் ஒப்படைத்த நிலையில்  விசைப்படகு மூலம் நாகை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு நாகை கடலோர காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, 'இந்தியாவின் கடல்சார் மண்டலங்கள் (அந்நிய கப்பல்கள் மூலம் மீன்பிடித்தல்)' சட்டத்தின்  (The Maritime Zones of India (Regulation of Fishing by Foreign Vessels) Act வழக்கு பதியப்பட்டு, சென்னை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
புயல் சின்னத்தால் கடலில் ஏற்பட்ட  காற்றின் வேகம் காரணமாக மீனவர்கள் தத்தளித்தபடி இந்திய கடல் எல்லை பரப்பிற்குள் வந்தார்களா அல்லது எல்லை தாண்டி மீன் பிடிப்பதற்காக வந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. கைதான நான்கு மீனவர்களும்  பர்மிஷ் மொழி மட்டுமே பேசுகின்றனர். வேறு மொழி தெரியாததால் தற்பொழுது வரை சைகையில் மட்டுமே அவர்களால் விவரம் கூற முடிகிறது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!

Aadhav Arjuna Interview : ”அழுத்தமா இல்லை ஆப்பமா?” நேர்காணலில் உளறிக்கொட்டிய ஆதவ் அர்ஜூனா..!

EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்

லாரா, ரோகித் எல்லாம் ஓரம்போ! சிக்ஸர் அடிப்பதில் சிங்க நடைபோடும் பிரபல பவுலர் - யாருங்க அவரு?

ABP Premium

வீடியோ

Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா EVKS  Elangovan: ஜெ. கலைஞரை அலறவிட்டவர் சிவாஜியின் சிஷ்யன்..! யார் இந்த EVKS இளங்கோவன்?Aadhav Arjuna interview | ”திருமாவ வரவிடாம பண்ணீட்டாங்க தடுத்ததே ஸ்டாலின் தான்”ஆதவ் அர்ஜுனா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
Aadhav Arjuna Interview : ”அழுத்தமா இல்லை ஆப்பமா?” நேர்காணலில் உளறிக்கொட்டிய ஆதவ் அர்ஜூனா..!
Aadhav Arjuna Interview : ”அழுத்தமா இல்லை ஆப்பமா?” நேர்காணலில் உளறிக்கொட்டிய ஆதவ் அர்ஜூனா..!
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
லாரா, ரோகித் எல்லாம் ஓரம்போ! சிக்ஸர் அடிப்பதில் சிங்க நடைபோடும் பிரபல பவுலர் - யாருங்க அவரு?
லாரா, ரோகித் எல்லாம் ஓரம்போ! சிக்ஸர் அடிப்பதில் சிங்க நடைபோடும் பிரபல பவுலர் - யாருங்க அவரு?
EVKS Elangovan: பெரியாரின் பேரன்! ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் தொடங்கியது எப்படி?

EVKS Elangovan Passed Away: யாரைத்தான் எதிர்க்கவில்லை - கருணாநிதி, ஜெயலலிதாவையே அடித்து விளையாடிய ஈவிகேஎஸ் இளங்கோவன்

Breaking News LIVE: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்

Pongal Gift Pack 2025 : “ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய்” சிறப்பு பொங்கல் தொகுப்புகள் – எப்போது கிடைக்கும்?

Embed widget