ஒரே நாளில் 1200 கன அடி நீர்வரத்து; உயர்கிறது முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் 100.2 மில்லிமீட்டர் தேக்கடி பகுதியில் 79.1 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,385 கன அடி ஆனது. அதனை தொடர்ந்து ஒரே நாளில் 1735 கன அடி தண்ணீர் அதிகமாக பெருக்கெடுத்தது. இந்நிலையில் தமிழக பகுதிக்கு சென்ற வாரங்களில் நீர் திறப்பு 300 கன அடி இருந்த நிலையில் தற்போது 500 கன அடி வீதம் என முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதன் எதிரொலியாக ஒரே நாளில் 1200 கன அடி நீர்வரத்து அதிகரிப்பு முல்லைப் பெரியாறு அணையில் தொடரும் நீர்வரத்து அதிகரிப்பு.
தமிழகத்தின் தேனி ,திண்டுக்கல் ,சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு தேவையான குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையில் தற்போது நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் மேற்குதொடர்ச்சிமலை பகுதிகளான முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையில் தற்போது நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் 100.2 மில்லிமீட்டர் தேக்கடி பகுதியில் 79.1 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,385 கன அடி ஆனது. அதனை தொடர்ந்து ஒரே நாளில் 1735 கன அடி தண்ணீர் அதிகமாக பெருக்கெடுத்தது. இந்நிலையில் தமிழக பகுதிக்கு சென்ற வாரங்களில் நீர் திறப்பு 300 கன அடி இருந்த நிலையில் தற்போது 500 கன அடி வீதம் என முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 128 .80 அடியாக உயர்ந்து நீர் இருப்பானது 4439 மில்லியன் கன அடியாகவும் இருந்துவருகிறது அரபிக்கடலில் தென்கிழக்குப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதன் நிலையில் தொடர்ந்து மழை பெய்து வந்தால் அணையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க கூடும் என பொதுப்பணித் துறையினரால் தெரிவிக்கப்படுகிறது. புயல் காரணமாக மழை அடுத்தடுத்து அதிகரிக்கும் என்பதால் அணைகளின் நீர் மட்டம் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதன் மூலம் தேனி, திண்டுக்கல்ல, மதுரை ,சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. அது மட்டுமின்றி மதுரையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வைகை அணைக்கான நீர் மட்டமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.