Mudukulathur Manikandan: மணிகண்டனின் உடல் மறு கூறாய்வு -கமல்ஹாசன் வரவேற்பு
மாணவர் மணிகண்டனின் உடற்கூராய்வில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
மாணவர் மணிகண்டனின் மர்ம மரணத்தில் மறு உடற்கூறாய்வு செய்யவேண்டும் என்ற உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மக்கள் நீதி மய்யம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மணிகண்டனின் மர்ம மரணத்தில் மறு உடற்கூறாய்வு செய்யவேண்டுமெனும் உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மநீம வரவேற்கிறது. வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்’ எனப்பதிவிட்டுள்ளார்.
முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மணிகண்டனின் மர்ம மரணத்தில் மறு உடற்கூராய்வு செய்யவேண்டுமெனும் உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மநீம வரவேற்கிறது. வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 8, 2021
மாணவன் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் கடந்த இரண்டு நாட்களாக போலீசார் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து பெற்றோர்கள், போலீசார் தனது மகனை விசாரணைக்கு அழைத்துச்சென்று அடித்து துன்புறுத்தியதால்தான் உயிரிழந்துள்ளார். ஆகவே, சம்மந்தப்பட்ட போலீசார்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருந்தார்.
முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த கீழத்தூவல் காவல் நிலையத்தில், கடந்த 4ஆம் தேதி இரவு போலீசார் தாக்கியதால் தான் உயிரிழந்ததாக கூறப்படும் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர் மணிகண்டன், வாகன சோதனையின்போது வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால், அவரை மடக்கி பிடித்த போலீசார் ஏன் வாகனத்தை நிறுத்தாமல் சென்றாய் என விசாரிக்கும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ காட்சியில், போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு மாணவர் மணிகண்டன் பதில் அளித்துள்ளார். அப்போது தமக்கு பின்னால் அமர்ந்து வந்த நண்பர் சஞ்சய் என்பவர் என் மீது போலீசில் வழக்கு உள்ளது. எனவே, பைக்கை நிறுத்தாமல் செல் என்று சொன்னதால்தான் நான் நிறுத்தாமல் சென்றேன் என அவர் போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்