மேலும் அறிய

சிலைகளுக்கு OK.. கட்சித் தலைவர் படங்களுக்கு NO - புதிய தேர்தல் விதிகள் வெளியீடு!

6-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளை வெளியிட்டு உள்ளது

தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள், பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் என 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருக்கின்றது. தேர்தல் நடத்தப்படாததால் இந்த மாவட்டங்களின் ஊராட்சிப் பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் முடங்கிப்போய் உள்ளன. இந்த தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு உறுதி அளித்தது.

செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால், இன்னும் பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கூடுதல் அவகாசம் கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தேர்தல் நடத்தும் முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக 6-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே, வாக்காளர்கள் வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, கடந்த 31ம் தேதி, தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்கள் மற்றும் தேர்தல் முடிந்து காலியாக இருக்க கூடிய ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திங்களன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வாக்காளர்கள், வாக்குச்சாவடிகள், வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் வாகனங்களில் பின்பற்றக்கூடிய நடத்தை விதிகள் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் குறிப்பாக மறைந்த தலைவர்களின் சிலைகளை மூட வேண்டிய அவசியமில்லை என்றும், கட்சித் தலைவர்களின் படங்களை வெளிப்படையாக வைக்க அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிலைகளுக்கு OK.. கட்சித் தலைவர் படங்களுக்கு NO - புதிய தேர்தல் விதிகள் வெளியீடு!

அதுபோல், உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை 1.5 மணி நேரம் நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது. காலை 7 முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே வழக்கமாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நேரம், தற்போது காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்கவும், கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்தவும் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படுவதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016ஆம் ஆண்டிலேயே முடிவடைந்து விட்டது.  அப்போதே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. ஆனால், வாக்காளர் பட்டியல் குளறுபடியால் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

இதனால் நிறுத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. ஆனால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை. அதுபோல், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊராட்சித் தலைவருக்கான தேர்தலும் நடத்தப்படவில்லை.

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கொட்டித் தீர்த்த மழை! 24 மணி நேரத்தில் எத்தனை செ.மீ. தெரியுமா?
காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கொட்டித் தீர்த்த மழை! 24 மணி நேரத்தில் எத்தனை செ.மீ. தெரியுமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
மதுரை திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை... இனி ஈசியான பயணம் !
மதுரை திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை... இனி ஈசியான பயணம் !
திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த இஸ்லாமியர்! ஆகம விதிகள் மீறப்பட்டதா? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்
திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த இஸ்லாமியர்! ஆகம விதிகள் மீறப்பட்டதா? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Embed widget