Kamal Haasan | ''ஒரே குட்டை.. ஒரே மட்டை..'' அதிமுக - திமுகவை மறைமுகமாக கலாய்த்த கமல்ஹாசன்!
காஞ்சிபுரம் படப்பையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களிடையே பிரசாரத்தில் ஈடுபட்டார்
அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், பாமக நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் காஞ்சிபுரம் படப்பையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களிடையே பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் முந்தைய அதிமுக அரசையும், தற்போது ஆளும் திமுக அரசையும் மறைமுகமாக விமர்சனம் செய்தார். அதில், ''ஒரு கட்சி சரியில்லை என்றால் இன்னொரு கட்சி என்று மாற்றி மாற்றி ஓட்டு போடுகிறீர்கள். ஆனால் அதே இரு கட்சிக்குள்ளே தான் அரசியல் வாதிகள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். நீங்களும் அவர்களுக்கேதான் மாறி மாறி ஓட்டு போடுகிறீர்கள். அதேக்குட்டை.. அதே மட்டை.. இது காமராஜர் சொன்னார். அதைத் தான் சொல்கிறேன். உள்ளாட்சித் தேர்தலை பொருத்தவரை உங்களது ஆதாரத் தேவையை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம். அதற்கான பலத்தை கிராம சபை கொடுக்கிறது. அதையே நாங்கள் தோளில் சுமக்கிறோம்.
மக்கள் இயக்கத்திற்கு ஆதரவு...மக்கள் இயக்கத்திற்கு தடை.. விஜய் முடிவு குழப்புதா? இதோ தெளிவான தகவல்!
முந்தைய அதிமுக அரசையும், தற்போது ஆளும் திமுக அரசையும் மறைமுகமாக பேசிய கமல்ஹாசன், எந்த அரசு வந்தாலும் உங்களை அடிமைப்படுத்தவே நினைக்கும். முதலாளி வேஷம் போடுகிறது. உங்களுக்கான உரிமையை அவர்கள் தானம் செய்வது போல கொடுக்கிறார்கள்'' என தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய்யின் ‛தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ களம் இறங்குகிறது. இந்த தேர்தலுக்கு திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், பாமக நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட விஜய் ஒப்புதல் அளித்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அதை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் தீவிரமாக தேர்தல் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நடிகர் விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மறைமுகமாக ஒப்புதல் அளித்திருப்பதை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலரும் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய தொடங்கிவிட்டதோடு, தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
‛சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு...’ பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி காட்டம்!