மேலும் அறிய

‛சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு...’ பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி காட்டம்!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது ! சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகச் சரித்திரமே கிடையாது என்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலையொட்டி விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று விழுப்புரத்தில் மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 202 அறிவிப்புகளை நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் சொல்கிறார். அப்படியெனில் எவ்வளவு திட்டங்களை நிறைவேற்றி இருக்கவேண்டும். நீங்களே எண்ணிப் பாருங்கள். தேர்தலின்போது 505 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு, கூடுதலாக 20 என 525 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. இப்போது அதில் 202 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறுகிறார். ஆனால் 3, 4 அறிவிப்புகள் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மற்றவை சாதாரண அறிவிப்புகளாகும். இதனை ஊடகங்களில் முதல்வர் வெளியிட்டுள்ளார்.

‛சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு...’ பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி காட்டம்!

திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவுக்கு உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு உச்சத்துக்குச் சென்றுள்ளது. ரவுடிகளைக் கைது செய்வதாக டிஜிபி சொல்கிறார். இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள்? அதிமுக அரசில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. சிறப்பாக ஆட்சி செய்ததாக நாங்கள் விருது பெற்றோம். இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் குடிமராமத்துத் திட்டத்தைக் கொண்டுவந்தோம். திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளது. நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது சன்ன ரகத்திற்கு ரூ.300-ஐ மட்டுமே உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்துவிட்டு தற்போது ரூ.105 மட்டுமே உயர்த்தி அறிவித்துள்ளனர்.

அதிமுக ஆட்சியில் இந்தியாவில் உணவு தானிய உற்பத்தியில் 100 லட்சம் மெட்ரிக் டன் பெற்று நாம் விருது பெற்றோம். அதிமுக அரசு மக்களின் அரசு. பின்தங்கிய மாவட்டமான விழுப்புரத்தில், இளைஞர்கள் படிக்கும் வகையில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த ஊரைச் சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர், அதனை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைப்பதாக அறிவித்துள்ளார். மாணவர்களை உயர்த்தியது அதிமுக அரசுதான். விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசினார். அருகில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் உள்ளனர்.

‛சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு...’ பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி காட்டம்!

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 என அறிவித்தார்கள். கல்விக் கடன் தள்ளுபடி என்றார்கள். முதியோர் உதவித்தொகை ரூ.1,500 என்றார்கள். மகளிர் சுய உதவிக்குழு வாங்கிய கடன் தள்ளுபடி என்றார்கள். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்று சொல்லிவிட்டு தற்போது மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாகப் பச்சைப் பொய் சொல்கிறார்கள். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் எல்லாத் தரப்பு மக்களையும் ஏமாற்றிய கட்சி திமுக. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

திமுகவைப் பொறுத்தவரை சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகச் சரித்திரம் கிடையாது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மினி கிளினிக்கைப் படிப்படியாகக் குறைத்துவிட்டு, அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட நடமாடும் மருத்துவமனை என்பதைப் பெயர் மாற்றி மக்களைத் தேடி மருத்துவம் என்று சொல்கிறார்கள். அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக கொண்டுவந்த திட்டங்களாகச் சொல்லி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் 644 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, 607 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டது. 198 திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டும், 409 திட்டங்கள் முடியும் தறுவாயிலும் இருந்தது. அதிமுக ஆட்சியில் ஜனநாயக முறைப்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

‛சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு...’ பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி காட்டம்!

முன்னதாக பேசியா முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ஒரு அரசுக்கு மக்களிடம் 2 வருடங்களுக்குப் பிறகு அதிருப்தி வரும். ஆனால் ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் இந்த அரசு, மக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்து விட்டது. இந்த அரசு மக்களை ஏமாற்றி வஞ்சித்து வருகிறது. இது சீட்டிங் அரசு. குற்றவாளிகள் நிறைந்த அமைச்சரவையாகவே இந்த அரசு உள்ளது. மக்களை ஏமாளி என்று நினைக்கும் அரசுக்கு இத்தேர்தலில் பாடம் புகட்டவேண்டும். 2, 3 திட்டங்களை நிறைவேற்றி விட்டு, 202 திட்டங்களை நிறைவேற்றியதாக சொல்கிறார்கள். இதனைப் பொது வெளியில் விவாதிக்க முடியுமா என சவால் விடுகிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget