மேலும் அறிய

மத்திய அரசு சட்டவரைவுக்கு எதிராக 9 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!

சிறு துறைமுகங்களை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க 9 கடலோர மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்ட முன்வடிவு குறித்து குஜராத் முதல்வர் விஜய்ரூபானி, மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே, கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒரிசா மாநில முதல்வர் நவீன்பட்னாயக், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட கடலோர மாநிலங்களை சேர்ந்த 9 முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

மத்திய அரசு சட்டவரைவுக்கு எதிராக 9 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!

சிறுதுறைமுகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில் துறைமுகம். கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகம் கொண்டு வரவுள்ள இந்திய துறைமுக மசோதா 2021 என்ற புதிய சட்டமுன்வடிவு மூலம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டமுன்வடிவு குறித்து விவாதிப்பதற்காக கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சில் வரும் ஜூன் 24ஆம் தேதி மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

தற்போது நடைமுறையில் இருக்கும் இந்திய துறைமுக சட்டம் 1908- இல் சிறுதுறைமுகங்களை திட்டமிடுதல், உருவாக்குதல், ஒழுங்குபடுத்துதல், கட்டுப்படுத்துதல் தொடர்பான அதிகரங்கள் மாநில அரசுகளிடமே உள்ளது என மாநில முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். புதியதாக கொண்டு வரப்பட உள்ள இந்திய துறைமுக சட்டம் 2021 மசோதாவில் மாநில அரசின் அதிகாரங்களை ஆலோசனை வழங்கும் அமைப்பாக இருக்கும் கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சில் அமைப்பின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு செல்ல வழிவகுப்பதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின். 

மத்திய அரசு சட்டவரைவுக்கு எதிராக 9 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!

சிறுதுறைமுகங்களை பொறுத்தவரை தற்போதைய அமைப்பு முறை வளர்ச்சிக்கு வழிவகுப்பதாக குறிப்பிட்டுள்ளார் மேலும்  புதிய கடல்சார் சட்டவரைவு 2021 நிறைவேற்றப்பட்டால் நீண்டகாலத்திற்கான பாதகங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தும் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின். இச்சட்டம் நிறைவேறினால் துறைமுகங்களை கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு பெரிய பங்குகள் இருக்காது என்றும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார், அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இந்திய துறைமுக சட்ட முன்வரைவு 2021-க்கு எதிராக இணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வரும் ஜூன் மாதம் 21ஆம் தேதி நடைபெற உள்ள கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சிலில் புதிய சட்டமசோதாவை எதிர்த்து ஒத்த கருத்துக்களுடன் மாநில அரசுகள் குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 மாநில முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

தலைப்பு செய்திகள்

பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்!
புதிய தொழில்முனைவோருக்கு பொன்னான வாய்ப்பு: தமிழக அரசின் ‘நீட்ஸ்’ திட்டத்தில் ₹75 லட்சம் வரை மானியக் கடன்!
புதிய தொழில்முனைவோருக்கு பொன்னான வாய்ப்பு: தமிழக அரசின் ‘நீட்ஸ்’ திட்டத்தில் ₹75 லட்சம் வரை மானியக் கடன்!
நாமக்கல் - அரியலூர் புதிய ரயில் பாதை திட்டம்... மத்திய அமைச்சரின் பதிலால் பெரம்பலூர் மக்கள் மகிழ்ச்சி
நாமக்கல் - அரியலூர் புதிய ரயில் பாதை திட்டம்... மத்திய அமைச்சரின் பதிலால் பெரம்பலூர் மக்கள் மகிழ்ச்சி
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Hybrid Ceiling Fan: கார்ல தான இருந்துச்சு, இப்போ சீலிங் ஃபேன்லயும் ஹைப்ரிட் வந்துடுச்சா.?! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
கார்ல தான இருந்துச்சு, இப்போ சீலிங் ஃபேன்லயும் ஹைப்ரிட் வந்துடுச்சா.?! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
Embed widget