மேலும் அறிய

DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்

தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் ஆகியும் கொளத்தூர் தொகுதி மக்களை தொடர்ந்து திமுக-வினர் வசைபாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இதற்கு முன்பு வந்த தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுக-வை வீழ்த்தி தனது முதல் அரசியல் களத்திலே விஜய் ஆட்சியைப் பிடித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் தோல்வி:

புதியதாக வந்த அரசியல் கட்சியிடம் தோற்றுவிட்டோம் என்பதைக் காட்டிலும், திமுக-வின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தோற்றுவிட்டார் என்பதே திமுக-வினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதன் காரணமாக, திமுக-வினரும், திமுக ஆதரவாளர்களும் பல தருணங்களில் மக்களை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். 

குறிப்பாக, கொளத்தூர் மக்களை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் தோற்றதால் கொளத்தூர் தொகுதி மக்கள் மிக கடுமையான விமர்சனத்தை தேர்தல் முடிவுகள் வெளிவந்து ஒரு மாதம் ஆகியும் எதிர்கொண்டு வருகின்றனர். 

தொடர்ந்து திட்டு வாங்கும் கொளத்தூர் மக்கள்:

கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொளத்தூர் தொகுதி மக்கள் கேடு கெட்ட மக்கள் என்று தரம் தாழ்ந்து விமர்சித்து பேசினார். அதற்கு கண்டனங்கள் குவிந்த நிலையில், கொளத்தூரில் நேற்று கருணாநிதியின் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் சத்யராஜ் கொளத்தூர் தொகுதி மக்களைப் பார்த்து நீங்கள் செய்தது நியாயமா? பட்டுதான் திருந்தனும். நீங்கள் பட்டு திரிந்தினால்தான் தெரியும் என்று சாபம் விடுவது போல பேசினார். சத்யராஜுன் இந்த பேச்சுக்கு தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது.

திமுக-விற்கு குவியும் கண்டனம்:

திமுக-வினர் தொடர்ந்து தமிழக மக்களை வசைபாடி வருவதற்கும், குறிப்பாக கொளத்தூர் மக்களை விமர்சித்து வருவதற்கும் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே தான் தோற்ற தொகுதியான கொளத்தூருக்கு நேரில் சென்று தனக்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். 

ஆனாலும், இதுபோன்று மக்களை விமர்சித்தும், குறிப்பாக கொளத்தூர்வாசிகளை வசைபாடியும் கருத்துக்களை தெரிவித்து வந்தால் திமுக-வினருக்கு பின்விளைவுகளையே ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. 

திமுக-வின் தோல்விக்கு இன்ஸ்டாகிராம்தான் காரணம் என்று ஒரு தரப்பினர் இளைஞர்கள் கூட்டத்தையும் வசை பாடி வருகின்றனர். அதேசமயம், இன்ஸ்டாகிராமில் திமுக-வினர் கணக்குகளை தொடங்கி திமுக-விற்கு ஆதரவாக பல கருத்துக்களைத் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

திருமணம் மீறிய உறவு ...விடிய விடிய எழாத மனைவி !! போலீசில் திடீர் சரணடைந்த கணவன்
திருமணம் மீறிய உறவு ...விடிய விடிய எழாத மனைவி !! போலீசில் திடீர் சரணடைந்த கணவன்
நாகப்பட்டினம் ஸ்போர்ட்ஸ் ஸ்டார்ஸ்க்கு செம்ம நியூஸ்... ஆட்சியர் கே.ஜே.பிரவீன்குமார் முக்கிய அறிவிப்பு!
நாகப்பட்டினம் ஸ்போர்ட்ஸ் ஸ்டார்ஸ்க்கு செம்ம நியூஸ்... ஆட்சியர் கே.ஜே.பிரவீன்குமார் முக்கிய அறிவிப்பு!
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
துடிதுடித்த மயில்... ஓடிவந்து தண்ணீர் கொடுத்துக் காப்பாற்றிய பயணிகள் - சீர்காழியில் நெகிழ்ச்சி!
துடிதுடித்த மயில்... ஓடிவந்து தண்ணீர் கொடுத்துக் காப்பாற்றிய பயணிகள் - சீர்காழியில் நெகிழ்ச்சி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
Top 3 Most Fuel Efficient Hybrid SUVs: ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
Embed widget