மேலும் அறிய

மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி சிவக்குமார் தான் ஆட்சி செய்கிறார்கள். சிவக்குமார் குழந்தையை கிள்ளுவாராம் , தமிழ்நாட்டில் மாணிக்கம் தாகூர் தொட்டிலாட்டுவாராம் - அன்புமணி

" அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் "

SC- ST மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி செலவிடப்படாமல் பொது திட்டத்திற்கு   செலவிடுவதை தடுக்கவும் அரசு ஒதுக்குகின்ற நிதி முழுமையாக இம்மக்களுக்கு செலவிட கோரியும், பஞ்சமி நிலம் மீட்பு தொடர்பாகவும் புரட்சி பாரதம் கட்சி சார்பில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி , பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கரிகாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அப்போது பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ;

புரட்சி பாரதம் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின மக்கள் பழங்குடியின மக்களுக்காண நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இதில் கடந்த கால அரசு பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக அந்த நிதியை சரியான முறையில் செலவு செய்யாத தரவுகளை இந்த நிழல் நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டு இருக்கிறார்கள். இது தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். அதற்கு இங்கு அத்தனை கட்சிகளும் சேர்ந்து தமிழக அரசை அழுத்தம் கொடுப்போம்.

தமிழ்நாட்டுக்கும் அண்டை மாநிலமான கேரளா , கர்நாடகா , ஆந்திராவுக்கும் நமக்கும் முக்கியமான பிரச்சனை நீர் பிரச்சனை தான். கேரளாவிடம் முல்லைப் பெரியாறு பிரச்சனை , கர்நாடகாவில் காவேரி பிரச்சனை. மேகதாது கட்டக் கூடாது என்று நிலைப்பாடு எடுத்தோம்.

" அரசு வேலை வழங்க வேண்டும் "

கர்நாடகாவில் சமீபத்தில் மூன்று தமிழர்களை அங்கு கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார்கள் வனத்துறை சார்ந்தவர்கள். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஐவர் குழு அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தது. தரவுகளை சேகரித்து இருக்கிறார்கள் அந்த நான்கு பேரும் மாடு காணவில்லை என்று காட்டுக்குள் சென்று இருக்கிறார்கள். மூன்று நபர்களை சுட்டு இருக்கிறார்கள் ஒருவர் தப்பித்து வந்து அவர் தான் சொன்னார்.

அவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளிகள் குடிசையில் வாழ்ந்து வருகிறார்கள் அப்படிப்பட்ட சூழலில் மான் வேட்டைக்கு போனார்கள் பொய் சொல்கிறார்கள் இதற்கு CBI விசாரணை வேண்டும். ஒரு கோடி ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இது கர்நாடக மாநில பிரச்சினை கிடையாது. கர்நாடகா இந்தியாவில் தான் இருக்கிறது தமிழர்கள் உலகத்தில் எங்கு பாதித்தாலும் நாங்கள் கேட்போம். ஆந்திராவில் 20 பேர் செம்மரம் வெட்டினார்கள் என்று கொலை செய்யப்பட்டார்கள்.

அப்பொழுது முதன் முதலில் நாங்கள் சென்றோம் வழக்கு பதிவு செய்தார்கள் ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் எங்கள் வழக்கறிஞர் பாலு வழக்கு பதிவு செய்தார். எல்லாம் நாங்கள் கேட்கக் கூடாதா ? யார் வேண்டுமானாலும் கேட்கலாம் நீங்கள் நியாயமாக நடந்து கொள்ளுங்கள்.

" அழுத்தம் கொடுக்க வேண்டும் "

மேகதாது அணை விவகாரத்தில் நாங்கள் எத்தனை முறை சொல்லி பார்த்து விட்டோம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இது தமிழக வெற்றிக் கழக பிரச்சனையோ , காங்கிரஸ் பிரச்சனையோ இல்லை. இது தமிழ்நாட்டின் பிரச்சனை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் தலைவர்களை பிரதமர் மோடியிடம் அங்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

நான் தனிப்பட்ட முறையில் சென்று அழுத்தம் கொடுப்பது வேறு அத்தனை கட்சிகளும் எம். பி , எம்.எல்.ஏ.க்கள் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் நீர்வளத்துறை அமைச்சர் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கர்நாடக முதலமைச்சர் சிவகுமார் கடந்த மூன்று மாதத்தில் மூன்று முறை டெல்லிக்கு சென்று இருக்கிறார் ஆனால் இங்கு நாம் ஒரு கூட்டம் கூட நடத்தவில்லை. இரண்டு மாதத்தில் மூன்று அனைத்து கட்சி கூட்டத்தை கர்நாடகா அரசு நடத்தியுள்ளது. இதில் சட்டப் போராட்டம் அரசியல் போராட்டம் செய்ய வேண்டும்.

" மாணிக்கம் தாகூர் அரசியல் செய்கிறார் "

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அவர்கள் தலைவர் ராகுல் காந்தியிடம் கேட்க வேண்டியது தானே ? அந்தமானில் கிரேட் நிக்கோபர் திட்டத்தில் காடுகளை அழிக்கின்ற திட்டம் என அந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லும் ராகுல் காந்தி மேகதாது மட்டும் என்னவாம் 2,500 ஏக்கர் காட்டை அழிக்கின்ற திட்டம். அந்தமானுக்கு ஒரு நியாயம் கர்நாடகாவிற்கு ஒரு நியாயமா ? காங்கிரஸ் தான் அங்கு இருக்கிறார்கள் ,  சிவகுமார் குழந்தையை கிள்ளுவாராம் , மாணிக்கம் தொட்டில் ஆட்டுவாரம் தமிழ்நாட்டில்.

"சுற்றறிக்கை அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை"

மாணவர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று எப்படி சொல்ல முடியும். இந்த தமிழக வெற்றிக்கான அரசிற்கு அதிகமாக வாக்களித்தது மாணவர்களும் மாணவர்களை சார்ந்தவர்களும் அதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

உலகம் முழுவதும் மாணவர்கள் பிரச்சனைக்கு போராட்டம் தான் செய்வார்கள். தமிழ் நாட்டில் தமிழுக்காக மாணவர்கள் போராடி தான் திமுக ஆட்சிக்கு வந்தது அப்படிப்பட்ட மாணவர்களை போராட்டம் செய்யக் கூடாது என்று சொல்வது யார் தடுக்கிறார்கள். இது மிகப் பெரிய தவறான சுற்று அறிக்கை.

Advertisement

தலைப்பு செய்திகள்

மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
ரூ.2,229 கோடியில் மெகா ரயில்வே திட்டம்! கும்மிடிப்பூண்டி மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?
ரூ.2,229 கோடியில் மெகா ரயில்வே திட்டம்! மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?
Coastal Cruise Tourism: கடலுக்குள் மிதக்கும் சொகுசு நகரம்! சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை! தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!
கடலுக்குள் மிதக்கும் சொகுசு நகரம்! சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை! தமிழக அரசின் அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget