Tamil Nadu Corona Guidelines: 27 மாவட்டங்களில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி - முதல்வர் உத்தரவு
பார்சல் முறையில் தேநீர் வாங்க வரும் பொதுமக்கள் பாத்திரங்களைக் கொண்டுவந்து பெற்றுச்செல்லுமாறும், நெகிழி பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
![Tamil Nadu Corona Guidelines: 27 மாவட்டங்களில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி - முதல்வர் உத்தரவு MK Stalin announced relaxation in Covid lockdown tea shops will be allowed to open in 27 districts Tamil Nadu Corona Guidelines: 27 மாவட்டங்களில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி - முதல்வர் உத்தரவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/03/4ff3ca3b2fd8c918f32b6501750aa21f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் தேநீர் கடைகள் இயக்க அனுமதிக்க அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் உள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 31-5-2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முழு ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது. இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில், நோய்ப் பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத கோவை உள்ளிட்ட எழு மேற்கு மாவட்டங்கள் மற்றும் தஞ்சை உள்ளிட்ட நான்கு டெல்டா மாவட்டங்கள் தவிர்த்த பிற மாவட்டங்களில் தளர்வுகள் சற்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, மேற்படி 11 மாவட்டங்கள் தவிர்த்து, தமிழ்நாட்டின் இதர 27 மாவட்டங்களில் 14-6-2021 முதல், தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல், மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பார்சல் முறையில் தேநீர் வாங்க வரும் பொது மக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுச் செல்லுமாறும், நெகிழி பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்த அனுமதி இல்லை.
மேலும், பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இவை இயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
பொதுமக்களின் நலன் கருதி, அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் 14-6-2021 முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.
கட்டுமானப் பணிகள் போற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும். வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 தரப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 21 வரை கொரோனா ஊரடங்கு அறிவிப்புகள்:
முன்னதாக, தற்போது உள்ள ஊரடங்கு சில தளர்வுகளுடன், ஜூன் 21-ம்தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். கொரோனா நோய்த் தொற்று தினசரி பாதிப்பு அதிமுள்ள கோயம்பத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத் தவிர்த்து இதர 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த 27 மாவட்டங்களில், மதுபானக் கடைகள், சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள், பழுதுநீக்கும் கடைகள், கட்டுமானப் பொருட்கள் கடைகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட நேரங்களில் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், தேநீர் கடைகளை இயக்க அனுமதி மறுக்கப்பட்டது. மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு, தேநீர் கடைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தேநீர் கடைகளை திறக்கும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
மேலும், வாசிக்க:
Kumbh Mela Fake Covid 19 : கும்ப மேளாவில் கோவிட் பரிசோதனைகள் போலியானவை : சுகாதாரத்துறை தகவல்..!
பல்ஸ் ஆக்சிமீட்டர், சானிடைசர், வெப்பநிலை பரிசோதனைக் கருவிகளுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பு!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)