”முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூபாய் 69 கோடி நன்கொடை” - முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
கொரோனா தடுப்பு பணிகளுக்காக இதுவரை ரூபாய் 69 கோடி முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக பெறப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, தமிழகத்தில் நேற்று மட்டும் ஒரேநாளில் 335 நபர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். 33 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் புதியதாக முதல்-அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற நிதி உதவி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பல தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் ரூபாய் 1 கோடியை நன்கொடையாக அளித்துள்ளனர். மேலும், தங்களது கட்சி எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியத்தையும் நிவாரணமாக வழங்குவதாக அறிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்துள்ளனர்.

நேற்று வரையிலும் #Donate2TNCMPRF-க்கு ரூ.69 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.

நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி!

ஏற்கனவே அறிவித்தபடி நன்கொடை முழுவதும் #COVID19 தடுப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

முதற்கட்டமாக உயிர்வளி - மருந்துகளுக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. pic.twitter.com/svTf62bPfj
— M.K.Stalin (@mkstalin) May 18, 2021

இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “நேற்று வரையில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 69 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி. ஏற்கனவே அறிவித்தபடி நன்கொடை முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக உயிர்வளி – மருந்துகளுக்காக ரூபாய் 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என அவர் பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அவர்களுக்கான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள், ரெம்டெசிவிர் மருந்துகளின் தேவைகள் அதிகரித்துள்ளது.
இதை உடனடியாக நிவர்த்தி செய்வதற்காகவே முதல்-அமைச்சர் மக்கள் கொரோனா தடுப்பு நிதி அளிக்க வேண்டுகோள் விடுத்திருந்தார். கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, கடந்த 7-ஆம் தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர் பொறுப்பு ஏற்றுக்கொண்ட 10 நாட்களில் ரூபாய் 69 கோடி நன்கொடையாக கிடைக்கப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பொது நிவாரண நிதிக்கு மேலும் பலரும் தொடர்ந்து நன்கொடை அளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.