மேலும் அறிய

Elavenil Valarivan: தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ள தங்கை இளவேனில்: அமைச்சர் உதயநிதி பாராட்டு

இளவேனிலுக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பாராட்டு தெரிவித்துள்ளார். 

சீனாவில் உள்ள செங்டுவில் 'உலக பல்கலைக்கழக விளையாட்டு 2023' போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய போட்டி ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், இந்தியா சார்பில் ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய இந்த விளையாட்டு போட்டிகள், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 18 போட்டிகள் நடைபெறுகின்றன.

பேட்மிண்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், வில்வித்தை, வாள்வீச்சு, துப்பாக்கி சுடுதல் மற்றும் ஜூடோ போன்ற போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில், தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வாலறிவனும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றிருந்தார். கடலூரை சேர்ந்த அவர், பள்ளியில் படிக்கும் போதிருந்தே துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று வருகிறார்.

சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இளவேனில் அசத்தல்:

கடந்த 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ககன் நரங்கிடம் பயிற்சி பெற்று வரும் இளவேனில் 2016ஆம் ஆண்டு மாநில அளவிலான தேர்வு போட்டியில் பங்கேற்று 250.6 புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்தார். அதேபோல கேரளாவில் நடைபெற்ற சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தினார். இதற்கு எல்லாம் உச்சமாக கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2 தங்கங்களை வென்றார். 

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 252.5 புள்ளிகள் எடுத்து அபாரமான வெற்றியை பதிவு செய்து தங்கம் வென்று அசத்தினார். இளவேனிலின் இந்த வெற்றி தமிழ்நாட்டு பெருமை சேர்த்துள்ளது.

"தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ள தங்கை இளவேனில்"

பல்வேறு முக்கிய விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் இந்த வெற்றி குறித்து வாழ்த்து கூறி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இளவேனிலுக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பாராட்டு தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "சீனாவில் நடைபெற்ற உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ள தங்கை இளவேனில் வாலறிவனுக்கு பாராட்டுகள். அவர் இன்னும் பல பன்னாட்டு போட்டிகளில் பதக்கங்களை குவித்து சாதனைகள் படைக்கட்டும். தங்கை இளவேனில் வாலறிவனுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget