மேலும் அறிய

Minister Udayanidhi Stalin: ’மதத்திற்கோ, நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை’ - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான் ராமர் கோயில் மீது திமுகவிற்கு உடன்பாடு இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதத்திற்கோ நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை;  ராமர் கோயில் வந்தது  பிரச்சனை இல்லை, அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான், அதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

 திமுக இளைஞரணியின் 2-வது மாநில  மாநாடு  வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளதை ஒட்டி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா சாலை  சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் இருந்து சுடர் ஓட்டத்தை துவங்கி வைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ” இந்த சுடர் ஓட்டத்திற்காக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் கலைஞர் சிலைகளுக்கு நம்முடைய வீரவணக்கத்தை செலுத்தி இந்த சுடர் ஓட்டத்தை இங்கிருந்து தொடங்கி வைத்துள்ளேன். இன்று தொடங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு  சேலம் வரை சுமார் 310 கிலோ மீட்டர் இந்த சுடர் கொண்டு செல்லப்படுகிறது. இரண்டு முறை இந்த மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது. தலைவர் இளைஞர் அணிக்கு கொடுத்திருக்கக் கூடிய மிகப்பெரிய சவால் இந்த மாநாடு .இதை நாம் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்றார்.

கடந்த 9 ஆண்டுகளாக மாநில உரிமைகளை அ.தி.மு.க. ஆட்சியில் நாம் முழுமையாக  கல்வி உரிமை, நிதி உரிமை அனைத்தையும் நாம் இழந்துள்ளோம். இவை அனைத்தையும் நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதுவரை இந்திய அளவில் இதுபோன்ற மாநாடு நடத்தப்படவில்லை. குடும்பத்தோடு இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். இனி இந்திய வரலாற்றில் இது போன்ற மாநாடு நடத்த முடியாது என காண்பிக்க வேண்டும் என்றார். கூடி கலைந்த கூட்டம் அல்ல , கொள்ளை கூட்டம் என்பதை நிரூபுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில் இரண்டு பேரிடர்  ஏற்பட்டதின்  காரணமாக இரு முறை தள்ளி வைக்கப்பட்ட  திமுக இளைஞர் அணி மாநில மாநாடு வரும்  21 ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. 3 முதல் 4 லட்சம் இளைஞர் அணியினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.  தற்போது ஏற்றப்பட்ட சுடர் திமுக தலைவரிடம் மாநாட்டின் போது ஒப்படைக்க உள்ளோம். இரு சக்கர வாகன பேரணி, புகைப்பட கண்காட்சி,   பேச்சாளர்கள் உரை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதக தெரிவித்தார்.

சேலத்தில் நடைபெறும்  இளைஞர் அணியின் மாநாட்டில் நிறைவேற்றப்படும்  தீர்மாணங்கள் குறித்து தமிழ்நாடு மட்டும் அல்ல  அனைவரும் எதிர்பார்கிறார்கள், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு  மிகப் பெரிய முன்னெடுப்பாக  மாநாடு அமையும். 50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்துக்கள் என்ற இலக்கை நோக்கி நீட் தேர்வு விலக்கு கையெழுத்துக்கள் பெறப்பட்டது. தற்போது  85 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளது. மாநாட்டின் போது அதை திமுக தலைவரிடம் ஒப்படைப்போம்,  பின்னர்  நானே நேரடியா  டெல்லி சென்று  குடியரசு தலைவரை சந்தித்து அதனை வழங்க இருக்கிறோம்” என தெரிவித்தார்.

மேலும், ராமர் கோயில் திறப்பு குறித்த கேள்விக்கு, "ஏற்கனவே கலைஞர் சொன்னதுபோல மதத்திற்கோ நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. ராமர் கோயில் வந்தது பிரச்சனை அல்ல அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான் அதில், திமுகவிற்கு உடன்பாடு இல்லை" என தெரிவித்தார்.  எடப்பாடி பழனிச்சாமி கால் வலி காரணமாக ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்த கேள்விக்கு, "அவர் தவழ்ந்து தவழ்ந்து போவதால் அவருக்கு அடிக்கடி கால் வலி வருகிறது" என விமர்சித்து பேசியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget