மேலும் அறிய

Senthil Balaji: மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்! - சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார் செந்தில்பாலாஜி!

உடல் நல பாதிப்பு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் தேறி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

உடல் நல பாதிப்பு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் தேறி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். 

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி கொடுப்பதாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருக்கும் அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை மற்றும் அமலாக்கத்துறை தொடர்பான ஆவணங்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பலமுறை ஜாமீன் கோரிய நிலையில்,  உச்சநீதிமன்றம் வரை சென்றாலும் அவருக்கு ஆதரவான தீர்ப்பு கிடைக்கவே இல்லை. இதுவரை அவருடைய நீதிமன்ற காவல் 12 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் கிட்டதட்ட 5 மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த நவம்பர் 12 ஆம் தேதி வாந்தி, மயக்கம் காரணமாக  முதலில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க அறிவுறுத்தினர். அங்கு இதயவியல்துறை, நரம்பியல் துறை சார்ந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் செந்தில் பாலாஜிக்கு மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்தக்கட்டி இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே மருத்துவ காரணங்களை காட்டி ஜாமீன் கோரியும், அது கிடைக்கவில்லை. 

இந்நிலையில் 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை 6.30 மணிக்கு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சிறைக்கு வந்து அடுத்த வாரத்துடன் 6 மாதங்கள் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget