கரூர் மாவட்டத்திற்கு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார் - அமைச்சர் செந்தில் பாலாஜி
கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர் சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கரூரில் கைத்தறி ஏற்றுமதித் துணி உற்பத்தியாளர் சங்கம் புதிய கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
கரூர் அடுத்த வேலுச்சாமிபுரம் பகுதியில் கரூர் கைத்தறி ஏற்றுமதித் துணி உற்பத்தியாளர் சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு கட்டிடத்தை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், "தமிழக முதல்வர் ஜவுளி துறைக்கு என்று பல்வேறு திட்டங்களை ஒதுக்கி உள்ளார். 200 ஏக்கர் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதற்கான இடம் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மின்சார துறைக்கு அதிக அளவில் கடன் இருந்த போதிலும், விசைத்தறி தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான நிதிகளை அரசு மானியமாக முதலமைச்சர் வழங்கி உள்ளார். தேர்தல் வாக்குறுதிகள் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டது. நம்முடைய மாவட்டத்திற்கு அரசினுடைய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை செய்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு முதலமைச்சரிடம் புதிய திட்டங்கள் கேட்க முடியவில்லை. காரணம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கே தனியாரிடம் நிலங்களை பெற்று நிறைவேற்ற காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எந்த திட்டம் முதலில் முக்கியம் என்பதை கவனத்தில் கொண்டு அதற்கான நிதிகளை கொடுத்து நம்முடைய மாவட்டத்திற்கு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார்" என்று பேசினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்